பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 + கம்பன் - புதிய பார்வை போன (ஆசிரிய மாலை) நூல்கள் இவற்றிலிருந்து மேற்கோள் காட்டுதல்தான் மரபு. ஒவ்வொரு துறைக்கும் பல உதாரணங்கள் காட்டுவதும் உண்டு. ஆனால் புலனடக்கம் என்று பொருள் செய்துவிட்ட நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டச் சங்கப் பாடல் ஒன்றும் பெற்றிலர். அதற்குப் பதிலாகக் குறள்களை மேற்கோளாகக் காட்டுகிறார். இவற்றை அடுத்து அகநானூறு 286ஆம் பாடலில் சில வரிகளைக் காட்டுகிறார். ஆனால் புலனடக் கத்துக்கும் அந்த வரிகட்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சங்க காலத்தில் அறிவின் துணை கொண்டு புலனடக்கம் செய்வது என்பது பலரும் அறியாத, அல்லது அறிந்தும் கவலைப்படாத ஒன்றாக இருந்தது என்று ஊகிக்க முடிகிறது. இந்தக் குறையைப் போக்கத் திருக்குறள் நேரிடை யாகவும் மறைமுகமாகவும் பலப்பல இடங்களில் புலனடக்கத்தைப் பற்றியும் பேசிற்று. சிலம்பும், மணிமேகலையும் தத்தம் சமய அடிப்படையில் நின்று புலனடக்கத்தின் இன்றியமையாமையைப் பேசின. பக்தி இலக்கிய காலத்தில் மறுபடியும் இது பேசப்படுகிறது. திருக்குறள் புலனடக்கம் பற்றிப் பேசுவதற்கும் பக்தி இலக்கியம் அதுபற்றிப் பேசுவதற்கும் ஒரளவு வேறுபாடு உண்டு. திருக்குறள் சட்டத்தை அப்படியே பேசுவது. நீதி நூல்கள் கொள்வன, தவிர்வன இரண்டையும் அப்படி அப்படியே கூறும் இயல்புடையன. ஆனால் பக்தி இலக்கியம் மக்களுடன் உறவாடி அவர்களைத் தம்வழிக் கொண்டு செல்ல முனைவதால் சற்று இறங்கிவந்து பேசும். புலனடக்கம் கடினமானது புல்னடக்கம் என்று எளிதிற் கூறிவிடலாமே தவிர, அதனைக் கடைப்பிடிப்பது என்பது மாபெருங் காரிய