பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 + கம்பன் - புதிய பார்வை குறள் கூறும் அடக்கம் தமிழக மக்களிடை இருந்த இக் குறைபாட்டை அறிந்த வள்ளுவப் பேராசான் அடக்கம் உடைமை என்று ஒர் அதிகாரமே வகுத்துள்ளார். ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருக்குறள்-126) என்ற குறளில் இதனை விரித்துக் கூறுகிறார். புலனடக்கம் என்றால் ஏதோ மாத்திரைகளை விழுங்கிவிட்டு மனத்தை அடக்குதல் என்று இன்று பலரும் நினைக்கையில், அதன் உண்மைத் தன்மைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்நாட்டுச் சான்றோர் அற்புதமான உவமையின் மூலம் விளக்கந் தருகிறார். நான்கு கால்களும் ஒரு தலையும் ஆமைக்கு இன்றியமையாத உறுப்புகள் என்பதை யாரும் மறுக்க வியலாது. ஆமையின் வாழ்க்கை நல்லமுறையில் நடைபெற அதன் கால்களும் தலையும் இன்றியமையாதவை. ஆனால், அதே கால்கள் ஆமையை ஆபத்து நிறைந்த இடத்துக்கு அழைத்துச் செல்லக்கூடும். ஒருவேளை, ஆமையின் பகை எதிரே வந்துவிட்டால் இந்த உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதன்மூலம் கட்டைபோலக் கிடந்து அது தன்னைக் காத்துக்கொள்கிறது. வள்ளுவர் பயன் படுத்தும் உவமை ஆமை உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்ளும், அவை பயனற்றுப் போய்விடவில்லை. எப்பொழுது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆமை விரும்புகிறதோ அந்த வினாடியே இந்த உறுப்புகள் வெளிவந்து பயன்படும். புலனடக்கத்திற்கு மனமே மூலகாரணம் மனிதனிடம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகள் உள்ளன. இவற்றை ஆட்டிப் படைப்பது