பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 + ஞானசம்பந்தன் . خ . وتكي மனம், இந்த மனம் இந்தப் பொறிகளின் மூலம் தொழிற்பட்டு தேவையற்ற பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு பொறியும் நம் அறிவு ஆணையிடும் முறையில் தொழிற்ப்ட்டால் அதுவே புலனடக்கம் எனப்படும். எத்துணைப் பெரியவர்களும், எத்தகைய வியத்தகு சக்தி பெற்றவர்களும், இது செய்ய முடியாமல் வழுக்கி விழுந்து விடுவதைக் காண்கிறோம். "சினம் இறக்கக் கற்றாலும் சித்தினலாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே! (பராபரக்கண்ணி-169) என்பது தாயுமானவப் பெருந்தகையின் வாக்கு. அதாவது ஒருவன் சினத்தை அடக்கிப் பல்வேறு சித்திகளைப் பெற்றாலும் அவனுடைய மனம் அறிவின் ஆணைப்படி அடங்கி நிற்கவில்லை எனில், அவனை ஞானி என்றோ, சித்தன் என்றோ கூற முடியாது. சாதாரண வித்தை காட்டுபவனே ஆவான் அவன். சிறுசிறு சித்துகளைக் காட்டித் தாங்கள் அவதார புருடர்கள் என்று கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றவர்கள் என்றும் உண்டு. எனவே மனிதன் முன்னேற்றம் பெற வேண்டுமானால், உறுதியாக அவனிடம் இருக்க வேண்டிய ஒன்று புலனடக்கம் என்பதைக் கண்டோம். நாயன்மார்களும் ஆழ்வார்களும் இது எத்துணைக் கடுமையான காரியம் என்பதை அங்கங்கே கூறிப் போயினர். இந்தப் பொறி புலன்கள் அடங்க வேண்டு மாயின் அது இறைவன் அருளிருந்தால்தான் முடியும் என இவர்கள் கூறினர். ஒருவாறு, ஒரளவு புலனடக்கம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது என்கிறார் உலகப் பொதுமறை தந்த பெருமகனார். ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்உணர்வு இல்லா தவர்க்கு (திருக்குறள்-354)