பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கம்பன் - புதிய பார்வை (மெய் உணர்தல் இல்லாமல் ஐந்து புலன்களையும் அடக்கிவிட்டதால் எப் பயனும் ஏற்படாது.) வெறும் புலனடக்கம் செய்துவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை. கல்லும், மரமும் எவ்விதப் பொறி உணர்வுகளும் இல்லாதவை. ஆனால் அவை மோட்சம் போவதில்லையே! அதேபோல ஐந்து பொறிகளை அடக்கிவிடுதல் எதிர்மறைப் பயன்தான் தரும். எனவேதான், மெய்யுணர்வு வேண்டும் என்கிறார் வள்ளுவர். புலன்கள் யாரையும் விடுவதில்லை இந்த அடிப்படையை நன்கு புரிந்துகொண்ட பக்தி இயக்கப் பெரியோர்கள், பொறி புலன்களை அடக்குதல் எவ்வளவு கடினமான காரியம் என்பதனை அங்கங்கே குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். குறிப்பிட்ட வயதும் பக்குவமும் வந்த நிலையில்தான், இந்தப் பொறிபுலன்கள் தம் தலைவனை ஆட்டிப் படைக்கும் என்று யாரும் கருதிவிட வேண்டா, திருஞானசம்பந்தரும், நம்மாழ்வாரும் மிகமிக இளம் பிராயத்திலேயே திருவருளைப் பெற்றுப் பாடத் தொடங்கியவர்கள். வயதோ மிகமிக இளம் பிள்ளைப் பருவம், இறைவனுடைய திருவருளை முழுவது மாகப் பெற்றவர்கள் இவர்கள் இருவரும். அப்படி இருந்தும், இந்தப் பொறிபுலன்கள் தமக்கு அடங்காமல் துன்புறுத்துகின்றன என்று பாடுகிறார்கள். தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே! அடியேன் ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கிறதுன் உள்ளம் ஆயமாய காயந் தன்னுள் ஐவர்நின்று ஒன்றால் ஒட்டார் மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே! (திருமுறை 1-50-7) (வலிவலம் என்னும் பகுதியிலுள்ள சிவபெருமானே! எனக்குத் தாயும் தந்தையும் நீதானே! என் உள்ளம்