பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 67 நின்னிடம் முழுவதுமாக அன்பு செய்ய விரும்புகின்றது. ஆனால் இந்த மாய உடலினுள் ஐந்து பேர் ஐம்பொறிகள்) இருந்துகொண்டு, என்னை எதிலும் நிலைக்கவிடாமல் அலைக்ைகழிக்கின்றனர். இது என்ன மாயமோ என்று அஞ்சுகிறேன்.) . என்னை ஆளும் வன்கோ ஒர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு உன்னைநான் அணுகாவகை செய்து போதி கண்டாய். வேதியா நிற்கும் ஐவரால் வினை யேனை மேவித்து உன் திருவடி சாதியா வகை நீ தடுத்து என்பெறுதி? அந்தோ! விண்உளார் பெருமாற்கு அடிமை செய் வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் மற்று என் செயா? в * * * * * * * * в «в» ве ஒர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன்? உன் திருவருள் இல்லையேல் (நாலாயிரம்-27, 45, 46, 49, 50) (என்னை அடிமைப்படுத்தும் இந்த ஐந்தையும் என்னுள் இருக்கவிட்டு, இரவுபகல் அவை ஒன்றுடன் ஒன்று மோதி, உன்னை நான் நெருங்கவிடாமல் செய்தனையே! என்னைத் துன்புறுத்தும் ஐந்து பேரால் என்னை மோதுவித்து, உன் திருவடியை அடையாமல் செய்வதால், நீ என்ன பயனை அடையப் போகிறாய் ஐயா? வைகுந்தத்தில் இருக்கும் பெருமானுக்குத் தொழும்பு பூண்டு தொண்டு செய்கின்றவர்களையே கூட இந்த ஐந்தும் துன்புறுத்தும் என்றால், கேவலம் இந்த மண்ணில் வாழும் என்னைக் கண்டால் என்னதான் செய்யமாட்டா? மிகவும் கொடியவர்களாகிய இந்த ஐவரையும், உன் திருவருள் உதவி இல்லாமல் நான் வெல்வது எவ்வாறு?)