பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 + கம்பன் - புதிய பார்வை புலனடக்கம் பற்றிச் சமயப் பெரியோர்களும் நீதிநூல் இயற்றிய பெரியவர்களும் கூறியன. இந்த நாட்டைப் பொறுத்த மட்டில் பேருதவி புரிந்தன. குறிக்கோள் வேண்டும் ஓர் இனமோ, தனிமனிதனோ வளர்ச்சி பெற்று முன்னேற வேண்டுமாயின், புலனடக்கத்தை அடுத்து இன்றியமையாது வேண்டப்படுவது வாழ்க்கையில் ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, விலங்கு வாழ்க்கையுடன் வைத்து எண்ணப்படும். தமிழகம் முழுதும் சுற்றிவந்து பழுத்த அனுபவம் உடையவராகிய நாவரசர் பெருமான், இந்த இனத்தின் குறைபாட்டை நன்கு அறிந்து கொண்டார். வாழ்க்கை வசதி ஏறஏற இன்ப வேட்டையில் மனிதன் செல்லத் தொடங்கிவிடுவான். ஏதேனும் ஒரு குறிக்கோள் (Aim in life) இருந்தால்தான் வாழ்வில் ஒர் இன்பத்தைக் காணமுடியும். எனவே அப் பெரியார் அந்தக் குறைபாடு இந்த இனத்தாரிடம் இருந்தது என்று நேரிடையாகக் கூறாமல், தன் மேல் அதை ஏற்றிக்கொண்டு. குறிக்கோள் இலாது கெட்டேன் என்று பாடிச் சென்றார். குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிக்கோளில் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். அதனை அடைய எடுக்கும் முயற்சியில்தான் அந்த மனிதன் இன்பத்தைக் காணமுடியும். வாழ்க் கையைப் பயனுடைய வாழ்க்கையாகவும் அதுவே அமைக்கும். உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கின்றவர்கள், தமக்கென முயலாது பிறர் பொருட்டு வாழ்கின்ற பெரியவர்கள். விரைவல் அடைந்துவிடக்கூடிய குறிக்