பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞான்சம்பந்தன் + 69 கோளை வைத்துக்கொண்டு அதை அடைந்துவிடுதல் சாதாரண மக்களின் வாழ்க்கை. பெரியவர்கள் என்பவர்கள் எளிதில் அடைய முடியாத குறிக்கோளையே வைத்துக்கொள்வர். மிகச் சாதாரணமான குறிக்கோளை ஏற்று. அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும் எளிதில் அடையமுடியாத குறிக்கோளை ஏற்றுக்கொண்டு, அதை அடையச் செய்யும் முயற்சியே சிறந்தது என்பது நம்மவர் கொள்கை. . . உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருக்குறள்-590) (மிக உயர்ந்த குறிக்கோளையே ஏற்றுக்கொள்க. அது அடைய முடியாததாக இருப்பினும் கவலை இல்லை. உயர்ந்த குறிக்கோளை ஏற்பதை விட்டுவிட வேண்டா) கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - (திருக்குறள்-772) (காட்டில் உள்ள முயலை வேட்டையாடிப் பிடித்து விடுவதைக் காட்டிலும், யானையைக் குறிவைத்து அம்பு எய்து, அது தப்பித்துவிட்டாலும் அந்த அம்பை வைத்துக் கொள்ளுதல் உயர்ந்தது.) தன்னலத் தியாகம் உயர்ந்த குறிக்கோள் என்பது யாது? தன் உயர்வை அடிப்படையில் கொண்ட குறிக்கோள் எதுவாயினும் அது சாதாரணமானதேயாம். பிறர் துயர் துடைக்க வேண்டும் என்று கருதி மேற்கொள்ளும் குறிக்கோள் உயர்ந்ததாகும். இதனை மேற்கொள்ள வேண்டுமாயின் ஒருவன் புலனடக்கம் செய்தவனாக இருத்தல் வேண்டும். புலனடக்கம் செய்தவனிடம் தன்னலம் என்பது இராது.