பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 71 இந்த உலகம் ஏன் நிலை பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் பண்புடையவர்களே. அவர்கள் ல்லையானால் இவ்வுலகம் மண்ணுடன் மண்ணாக அழிந்துவிடும்.) என்று நம் முன்னோர் கூறிச் சென்றனர். உலகிடை மனிதனாகப் பிறந்தவன் உயர்ந்து தேவனாக மாற வேண்டும்' என்பதே மனிதனுடைய குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதனையே திருக்குறளும் சமய இலக்கியங்களும் பெரிதும் வற்புறுத்துகின்றன. இந்தத் தனி மனித வளர்ச்சிக்கு மூலகாரணம் புலனடக்கம் என்பதை அறிந்தபிறகு, அடுத்த நிலையாக அன்புடைமைதான் பெரிதாக வேண்டப்பட வேண்டும். அன்புடைமை சங்க காலத்தில் அதிகம் பரவி இருந்திருந்தால் மும்மன்னர்களுள்ளும் இத்தனை போர்கள் நிகழ்ந்திரா. தமிழர்களாகிய தாங்கள் அனைவரும் ஒர் இனம் என்ற எண்ணம் பரவி இருந்திருந்தால், இந்நிலை வந்திராது. காதல் வாழ்க்கையில் இத்துணைத் தூரம் முன்னேறிய மக்கள் சாதாரணமாகச் சமுதாயத்தில் வாழும் சக மனிதர்களிடம் அதிகமான அன்பைச் செலுத்தாதது புதுமைதான்! சேரன், சோழன், பாண்டியன் என்பவர்களால் ஆளப்பெற்ற அந்தந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் அதுவே தம்முடைய நாடு என்றும், அந்த எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதி தம்மை ஒத்த தமிழர் வாழினும் பகைவருடைய நாடு என்றும் எண்ணும் எண்ணம் வலுவாகச் சமுதா யத்தாரிடம் ஏற்றப்பட்டுவிட்டது போலும். - குறள் வலியுறுத்திற்று - இதில் மற்றொரு புதுமையும் காணக் கிடக்கின்றது. புல்வர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர் என்ற இக்கூட்டத்தார் பரிசினை நாடி ஒவ்வோர் அரசனிடமும் செல்லும் இயல்பினர். ஒரு நாட்டு எல்லை பற்றிய கவலை அவர்கட்கு இருந்ததாகவோ, அவர்களை யாரும்