பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi ஒருவராகக் கூறப்பெறும் திருமாலுக்கு இப்பெயரை வழங்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது. ஆழ்வார்களின் பாடல்களிலும், தேவார திருவாசகங்களிலும் இவன் துளையம் ஆடியுள்ளான் என்பது உண்மையானாலும், சைவம் வைணவம் என்ற சிறிய வட்டத்துள் சிக்கவில்லை என்பதுடன் இவ்வட்டமே முழு உண்மையாகும் என்று கூறுபவர்களையும் இவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அறிய முடிந்தது. எனவே, சமயம் என்ற பெயருக்கு இன்றும், ஒன்பதாம் நூற்றாண்டிலும் நாம் தந்த குறுகிய பொருளை இவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அறிய முடிந்தது. நாம் ரூபங்கடந்த மூலப் பரம்பொருளை நம்பி, அதனிடம் சரணம் அடைவோர் அனைவரும் ஒரே சமயத்தைச் சேர்ந்தவர் என்ற கொள்கையை வலியுறுத்துபவன் இவன் என்பதையும் அறிய முடிந்தது. குறுகிய சமய வட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவன் என்பதை அறிந்தபிறகு, இவன் சமயப் பிரசாரம் செய்வதற்கு தன் காப்பியத்தைப் படைக்கவில்லை என்பது உறுதிப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் நிலவிய சைவம், வைணவம் இரண்டுமே நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்பவர்களின் செல்வாக்கின் கீழ் முழுவதுமாகத் தத்தம் பெருமை பேசும் சிறு வட்டங்களாக இருந்ததை அறிய முடியும். . நிறுவப்பட்டதும், அக்கால மக்களுள் பெரும்பான்மை யோரால் ஏற்றுக்கொள்ளப் பெற்றதுமான வைணவ சமயத்தைக் கம்பநாடன் தன் காப்பியம் முழுவதிலும், எந்த ஓர் இடத்திலும் குறிப்பிடவே இல்லை. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம், அன்றைய சைவ சமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செல்கிறது என்றாலும், சைவத்தைப் புகழ்வதையும் அதன் கொள்கைகளைப் பரப்புவதையும் தன் தலையாய கடமையாகக் கொள்ளவில்லை. அன்றையத் தமிழர் வாழ்க்கைக்குத் தேவையான 'குறிக்கோள் பற்றியே பெரிய புராணம் பேசுகிறது. சிந்தாமணி அன்றைய சைன சமயக் கொள்கைகளை ஒல்லுவாய் எல்லாம் கூறிச் செல்கிறது.