பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 + கம்பன் - புதிய பார்வை தடுத்ததாகவோ எவ்விதச் செய்தியும் இல்லை. அப்படி இருந்தும், சாதாரண மக்களிடம் இந்த அன்புணர்வு அதிகம் இல்லாமற் போனது வியப்புத்தான்! இந்தக் குறைபாட்டையும் வள்ளுவர் உணர்ந்தமை யால்தான் அன்புடைமை' என்ற ஒர் அதிகாரத்தையே வகுக்கின்றார். அன்பைப் பற்றியும், அதனை உடையவர் எத்தகையவராக இருப்பர் என்பது பற்றியும், கூறிக் கொண்டே வரும் அப்பெருமகனார், - என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம் (திருக்குறள்-77) (எலும்பு இல்லாத புழுவை வெயில் எவ்வாறு துன்புறுத்துமோ அதுபோல அறக்கடவுள் அன்பற்றவர் களை வருத்தும்.) + என்று பேசுகிறார். இறுதியாக, அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு (திருக்குறள்-80) (அன்பின் அடிப்படையில்தான் உயிர் நிலைத்து உள்ளது. அந்த அன்பில்லாதவர்கள் எலும்பும் தோலும் போர்த்திய உயிரற்ற சடலங்கள்) என்ற அளவிற்குக் கடுமையாகப் பேசுகின்றார். உலகின் பிற மொழிகளில் (கிரேக்கம் போன்றவற்றில்) தோன்றிய நீதி நூல்கள் தகுவன-தகாதன, விரும்பத் தக்கன-தகாதன என்பவற்றைக் கூறுவதுடன் அமைந்துவிட்டன. ஆனால் வள்ளுவப் பேராசான் இந்த இனம் எப்படியாவது வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபிறகு இந்நூலை இயற்றினமையின், உயிர்நாடியான தேவைகளைப் பற்றிக் கூறும்பொழுது மிகவும் இடித்துக் கூறத் தொடங்குகிறார். மிக இன்றியமையாதது வேண்டமற்பாலதாகிய ஒரு பண்பு சமுதாய மக்களிடம் இல்லாமல் இருந்தால், நயத்திலும்