பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 73 பயத்திலும்- நகைச்சுவையுடனும்- எள்ளி நகையாடியும், இடித்தும் அந்தப் பண்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பழக்கம் வள்ளுவரிடம் காணப்படும் ஒன்றாகும். இந்த முறையில் உலகில் தோன்றிய பிற நீதி நூல்களிலும் குறள் ஓரளவு மாறுபட்டு நிற்கின்றது. அன்புடைமையும் அதன் மூலமும் - இவ்வாறு மேற்சொன்ன மக்களை இடித்துக் கூறின மையினால்தான் போலும், இந்தத் தமிழினமும் அதன் நாகரிகமும் இன்றும் நின்று நிலவுகின்றன! பிற நாகரிகங்களில் நீதிநூலார் இந்த முறையைக் கையாளாமையால் அந்த நாகரிகங்கள் இன்று இல்லாது ஒழிந்தன போலும்! வள்ளுவரை அடுத்து வந்த சமய நூலார்களும் இறைவ னிடத்தில் அன்பு வேண்டும் என்று கூறினதுடன் அமையாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு வேண்டும் என்றும் கூறினர். சமய நூலாகிய திருமந்திரம் இன்னும் ஒருபடி மேலே சென்று, அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே! திருமந்திரம்-27) கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே - (திருமந்திரம்-285) (அன்புதான் சிவம் என்பதை அறிந்தபின் அன்புடை யார் சிவமாகவே ஆகிவிடுவர். இறைவன் திருவடியைக் கண்டேன். எங்கே என்றால், என் அன்பினுள்ளேயே யான் கண்டுகொண்டேன்.) அன்பிலார் சிந்தை அறம் அறியாரே திருமந்திரம்-ை (மனத்தில் அன்பில்லாதவர் அறத்தையும் அறிந்து கொள்ள முடியாது.)