பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் அரிமா நோக்கு கிம்பநாடன் இத் தமிழகத்தில் தோன்றி, ஒப்பற்ற கல்விமானாகியயின், உலகம் போற்றும் ஓர் இலக்கியத்தைப் படைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ஒரு சிறந்த கவிஞன், தான் தோன்றிய காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் அவன் தோன்றிய இனம், மொழி, நாகரிகம் என்பவற்றின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுபவனாகவும் இருத்தல் வேண்டும். தனக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தவனாக ஆவதுடன், குருட்டுத்தனமாக ஒன்றைப் புகழவோ இகழவோ செய்யாமல், நடுநிலையுடன் நின்று, தன் இனத்தின் பண்பாட்டை அன்றுள்ள நிலை வரை சீர்துரக்கிப் பார்க்கிறான். அதிலுள்ள குறைவு நிறைவுகளை ஒரளவு கணிக்கின்றான். அந்த நாகரிகம் அடைந்துள்ள மாற்றங் களையும் தன் கவனத்துக்குக் கொண்டு வருகின்றான். இந்தமாற்றங்கள் ஏன் நிகழ்ந்தன என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். எல்லா மாற்றங்களும் நன்மை பயக்கும் என்று கூறிவிட முடியாது. காலாந்தரத்தில் இயல்பாகவே ஏற்பட்ட மாற்றங்கள், வாழ்ந்த அனுபவத்தின் அடிப் படையில் மக்களாகப் பார்த்துத் தேவை எனக் கண்டு செய்துகொண்ட மாற்றங்கள், என மாற்றங்கள் பல வகைப்படும். எத்துணை முயன்றும் ஒரு சில தீமை பயக்கும் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாமலும் போயிருக்கலாம். இவை அனைத்தையும் அரிமா நோக்குடன் கண்டு தெளிகின்றான் கவிஞன்.