பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 + கம்பன் - புதிய பார்வை கம்பன் கண்ட மாற்றங்கள் இதன்பிறகு அவன், தான் ஆக்கப்போகும் நூலில், தான் கண்டு தெளிந்த உண்மைகட்கு வடிவு கொடுக்க முயல்கின்றான். சங்க காலத்திலிருந்த நிறைகளை ஏற்றுக்கொண்டும், அங்கிருந்த குறைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டும் திருவள்ளுவப் பேராசான் நூல் வகுத்தான். அடுத்து வந்த பக்தி இயக்கக் காலத்தில் புலனடக்கம், அறிவின் துணைகொண்டு நன்மை எது என ஆய்தல், மனிதப் பிறப்பின் குறிக்கோள் யாது என்று ஆய்தல், உயிர்கள் அனைத்தும் இறைவன் உறையும் கோயில் என்று காண்டல், அதன் பயனாக அனைத் துயிர்கட்கும் அன்பு செய்தல் என்பன போன்ற வளர்ச்சிகள் ஒரளவுக்குத் தோன்றியதையுங் கண்டான். உலகில் முழுவதும் நல்லது என்றோ முழுவதும் தீயது என்றோ எதுவும் இல்லை. எந்த நல்லதிலும் ஒரளவு தீமை கலந்திருக்கத்தான் செய்யும். அதேபோல எத்துணைத் தீயதிலும் ஒரளவு நன்மை கலந்திருக்கத்தான் செய்யும். இவற்றைச் சந்தித்து நன்மையை விடாமல் வளர்க்க வேண்டும் எனக் கருதும் அறிஞன், அத் தீமையை நன்மையிலிருந்து எவ்வளவு குறைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் குறைக்க முற்படுகிறான். பக்தி இயக்கத்தில் குறை - கம்பன் தோன்றிய காலத்திற்கு முன்னர் இத் தமிழகம் இருந்த நிலை, பின்னர் களப்பிரர் இடையீட்டால் விளைந்த பயன்கள், பக்தி இயக்கக் காலம் தோன்றக் காரணம், பக்தி இயக்கத்தால் விளைந்த நன்மைகள் என்பவை பற்றிக் கண்டோம். நாம் இன்று காணுங் காட்சியைக் கம்பன் அன்றே கண்டிருக்க வேண்டும். பக்தி இயக்கம் பல நன்மைகளைச் செய்தும் ஓரளவு தீமையும் புரிந்துவிட்டது என்று கூறினோம் அல்லவா? அத் தீமை