பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 77 பாது? கடவுட் கொள்கையும் பக்தியும், பரந்து விரிந்து வளர்வதற்குப் பதிலாகக் குறுகிய வட்டத்தில் வளரத் தொடங்கின. பரம்பொருள் ஒன்றுதான்; அது நாம ரூபம் கடந்தது, அனைத்துக்கும் மூலகாரணம் அதுவே, என்பவற்றை பலவிடங்களிலும் கூறின. நாயன்மார்களும் ஆழ்வார்களும், சைவம் வைணவம் என்ற வட்டத்தை வகுத்துக்கொண்டு, அவ் வட்டத்துள் நின்று வெளிவர மறுத்துவிட்டனர். தத்தம் சமயமே உயர்ந்தது என்றும், அச் சமயம் பரம்பொருளுக்கு எந்தப் பெயர் இட்டு அழைக் கிறதோ அதுதான் உண்மை என்றும், பிற சமயங்கள் அனைத்தும் தவறானவை என்றுங் கூறத் தலைப்பட்டனர். இத்துறையில் வைணவர்கள் கொஞ்சம் மிகுதியாகவே சென்றனர் என்று கூற வேண்டும். அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில்-வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று . (நாலாயிரம்-3489) என்று பாடுகிறார் திருமழிசை ஆழ்வார். இதில் வியப்பு என்னவென்றால் இவர்கள் இம்மாதிரி பாடுகின்ற காலத்தில் சமணரும், பெளத்தரும் வலிகுன்றி இருந்தனர். சைவம் ஒன்று மட்டுமே வைணவத்துடன் போட்டியிடும் நிலையில் இருந்தது. அதனால்தான் சமணர் அறியாமையுடையவர்கள், பெளத்தர்கள் உண்மை காணாமல் ஏமாற்றுகின்றவர்கள் என்று கூறிய ஆழ்வார், சைவர்கள் கீழ்மக்கள் என்று கூறும் அளவுக்குச் சினம் கொள்கிறார். இறுதியாக மாதவனை ஏத்தாதவர் யாவராயினும் ஈனப் பிறப்புடையார் என்றும் முடிக்கின்றார். சமயப் பொறை இன்மை சமய இலக்கிய காலம் நன்மைகள் செய்ததுடன் மக்களை உன் சமயம், என் சமயம் என்று சிறுசிறு