பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - கம்பன் - புதிய பார்வை வட்டங்களுள் நின்று சண்டை இட வைத்துத் தீமையையும் செய்தது. தமிழனைப் பொறுத்தமட்டில் சிறு எல்லையில் நின்றுகொண்டு அடுத்த எல்லையிலுள்ள தன் இனத் தவர்களுடன் போரிடுவது பழக்கமாகிவிட்டது. சங்க காலத்தில் சேரநாடு, சோணாடு, பாண்டிநாடு என்ற வட்டங்களுள் நின்று போரிட்டனர். களப்பிரரிடம் செம்மையாகத் தண்டனை பெற்றும் தமிழன் இந்தச் சிறுவட்டப் பிரிவினையிலிருந்து நீங்கினதாகத் தெரிய வில்லை. சங்க காலத்தில் புவியியல் ரீதியில், அரசியல் ரீதியில் பிரிவினை, பக்தி இலக்கிய காலத்தில் சமயம் என்ற சிறு வட்டத்தில் என்று பிரிவினையும் போராட்டமும் நிகழ்ந்தன. இவ்வாறு கூறுவதால் இந்தக் குறை ஏதோ தமிழர்களிடம் மட்டுமே காணப்பட்ட குறைபோலும் என்று கருதிவிட வேண்டா. உலகின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் இத்தகைய நிலை இருந்து வருவதை உலக வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இவ்வாறுதான் இருக்கிறது என்றதனால் தீமை நன்மையாகிவிடாது. சங்ககால மக்களிடை சமயப்பொறை நிரம்ப இருந்தது. சைவர், வைணவர், சமணர் ஆகிய மூவரும் மிக்க பொறையுடன் வாழ்ந்தனர். ஒருவரை ஒருவர் உயர்ந்த சமயம், தாழ்ந்த சமயம் என்று குறை கூறும் நிலை இல்லை. ஆனால் அரசியல் பொறை அன்று அறவே இல்லை. சமய இலக்கிய காலத்தில் அரசியல் பொறை ஓரளவுக்கு இருந்தது. இந்த அரசியல் பொறை இத்தமிழர்க்கு வருவதற்கு மறைமுகமாக உதவி புரிந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களுடன் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவருமே தோற்றுத் துன்புற்றனர். ஆதலின் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை ஏற்படவில்லை. பொதுப்பகை காரணமாக ஒருவித ஒற்றுமையும் இருந்து வந்தது.