பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 79 புதிய இயக்கம் பக்தி இயக்கத்தின் இறுதிப் பகுதியாகிய ஒன்பதாம் நூற்றாண்டில் சமயப் பொறை சீரழிந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அடுத்த சமயத்தைக் குறை கூறிக் கொண்டது போக, மற்றொரு புதிய கிளர்ச்சியும் தோன்றலாயிற்று. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இதுவரை அறிவுவாதத்திற்கு அதிக இடங் கொடாமல் பக்தியை வளர்த்தனர். இதனுடைய எதிர் ஒலியாக அறிவின் அடிப்படையில், சமயத்தை வளர்க்கும் நிலை தோன்றிற்று. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் நுணுக்கமான அறிவு வாதத்தைத் தொடங்கினார். அவர் இவ்வாறு தொடங்க வேண்டிய சூழ்நிலை அப்பொழுது இருந்தது. பெளத்தம், வைதிக சமயத்தை எதிர்த்துத் தோன்றியதாயினும், கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிடினும், அறிவு ஒன்றையே துணையாகக் கொண்டு, மிக நுண்மையான அறிவு வாதத்தை மேற்கொண்டு, தன் சமயத்தை நிலைபெறுத்த முயன்றது. அறிவு வாதத்தை, அறிவு வாதத்தால்தான் சந்திக்க முடியுமே தவிர பக்தியைக் கொண்டு ஒன்றுஞ் செய்ய முடியாது. எனவே பெளத்தர்களின் மிக நுணுக்கமான அறிவு வாதத்தை எதிர்த்துப் போராட அவர்கள் போற்றும் அறிவு வாதத்தையே சங்கரரும் மேற்கொண்டார். உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம் என்பவற்றிற்கு விரிவுரை வகுக்கும் வழியில் 'அத்வைதத்தை நிலைநாட்ட முயன்றார். அறிவில் மேலோங்கி நிற்பவர்கட்கு மட்டுமே இது பயன்படும். மேலும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நிறுவிப்போன பக்தி மார்க்கத்தை அறவே ஒதுக்கிவிடுதல் இயலாததாக இருந்தது. எனவேதான் அத்வைதம் பேசிய சங்கரர், செளந்தர்யலகரி, சிவானந்தலகரி, தட்சிணாமூர்த்தி