பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கம்பன் - புதிய பார்வை مبہم ہے۔ تمـہ ---- அட்டகம், பஜகோவிந்தம் போன்ற பக்திப் பாடல்களையும் இயற்றினார். இந்த நிலையில் இராமானுஜர் தோன்றிச் சங்கரரின் அத்வைதக் கொள்கையை மறுத்து, அதே அறிவு வாதத்தின் துணைகொண்டு விசிட்டாத்வைதக் கொள்கையைப் பேசினார். சைவ, வைணவ மாறுபாடு 9ஆம் நூற்றாண்டில் தலைதூக்கி நின்றது என்பதற்கு ஐயமில்லை. குறுகிய சமயவட்டங் கடந்து எனவே, தமிழ்ப் பண்பாட்டின் குறைகளை அகற்றி, ஒரு புதிய நெறியை வகுக்க விரும்பிய கம்பநாடன், இந்தச் சைவ வைணவப் போராட்டத்தில் இறங்க விரும்பவில்லை. இவை இரண்டையும் ஒருமைப்படுத்தி ஒரு புதிய இயக்கத்தை உருவாக்க விரும்பினான். சமய இலக்கியம் வளர்த்த பக்தி வழி ஆதிசங்கரர், இராமானுஜர் போன்றவர்கள் நிறுவிய அறிவு வாத வழி என்ற இரண்டையும் ஒன்றாக்கிப் புதுவழி காண முயன்றான் கம்பன். அதனால்தான் எல்லையற்ற அன்புடைய (பக்தியுடைய) குகனையும், அறிவின் முடிமணியான அனுமனையும் படைக்கிறான். அப்படியானால் திருமால் அவதாரம் என்று கூறப்படும் இராமகாதையை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்ற வினாத் தோன்றும் அல்லவா? திருமாலை அவன் புறக்கணிக்கவில்லை. ஆனால் இராமனாக அவதரித்தது இந்த மூவருக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் என்பதுதான் அவன் கூற வந்தது. சமயம் நேரும்போதெல்லாம் இக்கருத்தை எவ்வளவு விரிவாகக் கூறமுடியுமோ அவ்வளவு விரிவாகப் பேசுகிறான். அதுபற்றிப் பின்னர்க் காணலாம். ஆனால் கம்பன், காப்பியம் படைக்கின்ற காலத்தில் இராமன் திருமாலின் அவதாரம் என்ற கொள்கை வலுப்பெற்று விட்டது. வான்மீகியின் தொடக்கம், இராமன் மனிதருள்