பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 81 உயர்ந்தவன் என்ற பேச்சுடன் தொடங்குகிறது. இடையேதான் அவதாரப் பேச்சு வருகிறது. வான்மீகத்தில் டச் செருகல்கள் பற்றிக் கூறத் தேவை இல்லை. எனவே வான்மீகி காலத்தில் இல்லாத கருத்துப் பிற்காலத்தில் நுழைந்தது என்பதனை ஊகிக்க அதிக நேரம் ஆகாது. இத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆழ்வார்கள் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்டதற்கு அடுத்தபடியாகத் தான் இராமவதாரத்தில் ஈடுபட்டனர். இராம காதையின் பல பகுதிகளில் ஈடுபட்டுத் தம் பாடல்களில் அப் பகுதியை உயர்த்திப் பாடிவிட்டனர். வான்மீகத்தில் சாதாரண வேடனாக உள்ள குகன், ஆழ்வார் பாடலில் இராமன் தம்பியாக ஆகிறான். - இக் கதையை ஏன் எடுக்க வேண்டும்? இந்த நிலையில் இராம காதையைப் பாட எடுத்துக் கொண்ட கம்பன், திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பதை ஏற்றுக்கொண்டு பாடத் தொடங்குவது. தவிர வேறு வழியே இல்லை. அவன் எவ்வெவற்றை எல்லாம் விழுப்பொருள்கள் (Values.in Life) என்று கருதினானோ அவற்றை எல்லாம் பெய்து பாடக் கதை இடம் அளிப்பதுபோல் வேறு எந்தக் கதையும் இடம் தரவில்லை. பாரதம், பாகவதம் போன்ற கதைகள் அவன் கருத்தைக் கூறுவதற்கு ஏற்ற கொள்கலமர்க இல்லை. இராம காதையைக்கூட வான்மீகத்திலிருந்து பல இடங்களில் மாற்றிவிடுகிறான். அவனுடைய குறிக்கோளுக்கு மாறாக மூலக்கதை இருப்பின் அதை அழகாக மாற்றுவதற்கு அவன் தயங்கவில்லை. இராமன் திருமாலின் அவதாரம் ೯೯p கொள்கை கம்பன் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்தொட்டே தமிழ்நாட்டில் பரவி இருந்ததைச் சிலப்பதிகாரத்திலும்,