பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - கம்பன் எடுத்த முத்துக்கள் பலம் கொண்டோராகவும் ஆயிர மறைப்பொருள் உணர்ந்த வர்களாகவும் இருக்கின்றனர். யான் என்ற அகங்காரத்தை அழித்துவிட்டிருப்பின் அந்த வினாடியே இறைவனை அடைய முடியும். அந்த நானை அழித்திருப்பின் உலகம் முழுவதும் இறைவடிவாக இருப்பதை உணர்ந்திருப்பர். அதன் மறுதலையாக உலகம் முழுவதும் தானே நிறைந்திருப்பதாக இவர்கள் கருதிவிட்டனர். இவர்களுடைய நான் ஈடு இணையற்ற பேரகங்காரம் (Universal Ego) ஆகும். இந்த அகங்காரத்தை அகற்ற இராமனாகவோ, நரசிம்மமாகவோ இறைவன் வடிவெடுத்து வரவேண்டி உள்ளது. - பரம்பொருள் இராகவனாக வடிவெடுத்துள்ளதால் குகன் போன்ற அன்பு வடிவமானவர்கள் பயனடைகின்றனர். அன்பே வடிவான குகனும், அறிவே வடிவான வீடணனும் ஒரே நேரத்தில் பயன் பெறுகின்றனர். விராதன், கவந்தன், அகலிகை முதலியோர் சாபம் நீங்கப் பெறுகின்றனர். சரபங்கன், சவரி முதலியோர் இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகே அடைய வேண்டிய இறையனுபவத்தை, இறைக்காட்சியை இந்த உடலுடனேயே பெறுகின்றனர். சரபங்கனையும் சவரியையும் தேடிச் சென்று காட்சி தருகிறான் பரம்பொருள். தீயோரை அழிப்பதுடன் நல்லோருக்கு அருள் வழங்கவும் இறைவன் எடுக்கும் அவதாரம் பயன்படுகிறது. . - பால, அயோத்தியா காண்டங்களில் காப்பியத் தலைவனின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றை மிக அற்புத மாகக் கம்பநாடன் படைத்துவிட்டான். காப்பிய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் பிராட்டியைப் பிரிந்து இராகவன் தொழிற்பட வேண்டும். கர, துடனர்களை அவன் அழிப்பதற்குச் சூர்ப்பனகை பயன்பட்டாள். அவர்களை இராகவன் தேடிச் சென்று அழிக்கவில்லை. அதன் எதிராக அவர்களே இராகவனைத் தேடி வந்து அழிகின்றனர். நேரிடையாக அவர்கள்மேல் போர் தொடுக்க இராகவனுக்கு எந்த முகாந்தரமும் இல்லை. முனிவர்கள் வேண்டிய போது, இவர்களை அழிக்கின்றேன்' என்று இராகவன் அபயம் கொடுத்தான் எனினும், காரணமின்றிப் போரிடச் செல்ல