பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H06 - கம்பன் எடுத்த முத்துக்கள் கருதுகின்றிலேன்" (திருச்சதகம் 92) என்ற முறையில் தசரத குமாரனைக் குழந்தையாகவும் இளைஞனாகவும் வைதேகி கேள்வனவாகவும் கான நேர்ந்ததே தவிர, அப்பெருமகனின் மற்றொரு பக்கத்தைக் காணவோ அறியவோ நமக்கு வாய்ப் பில்லை. இந்த நிலையில் இராகவனை யாரென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த அறிவுறுத்தலை இரண்டு வகையாகச் செய்யலாம். முதலாவது வகை, கவிஞன் படர்க்கைப் பரவலாகப் பரம்பொருள் இலக்கணங்களைக் கூறி, அவன்தான் இராமன் என்று கூறலாம். இம்முறை அழகுடையதேனும் காப்பிய இலக்கணத்திற்கு அதிகம் பொருந்தி வராது. நாடகங்களைப் போலல்லாமல் காப்பியங்களில் கவிஞன் ஒரோவழி தானே ஒரு சூழ்நிலை அமைத்துக்கொண்டு பாத்திரப் பண்பை விளக்குகிறது முறைதான். ஆனால், கம்பநாடன் இதனைச் செய்யாமல் இரண்டாவது வகையைக் கையாளுகிறான். - இந்த இரண்டாவது வகையில், காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் காப்பியத் தலைவன் பண்புநலன்களை விளக்க உதவுகின்றன. அந்த முறையில்தான் கம்பநாடன் இக்காண்டத் தின் முதலிரண்டு படலங்களில் இராமனின் மறைந்துள்ள பகுதியை விளக்க முற்படுகிறான், விராதன், சரபங்கன் இருவரும் இராமனின் அறியமுடியாத பகுதியை எடுத்து முன்னிலைப் பரவலாகப் போற்றுகின்றனர். விராதன் என்பவன் சாபத்தால் அரக்க உருவில் வாழும் கந்தர்வன். சரபங்கன் நம்மைப்போல் மனிதனாகப் பிறந்து தவ முனிவனாக வளர்ந்துள்ள சான்றோனாவான். விராதனைப் பொறுத்தமட்டில் இராமன் வாளால் கைகள் துண்டிக்கப் பட்ட நிலையில் பெரிய குழிதோண்டி அவனைப் புதைக்க வேண்டுமென்பதற்காக இராமன் தனது காலால் விராதன் உடலை எட்டித் தள்ளுகிறான். இராமனுடைய திருவடி சம்பந்தம் (திருவடி தீட்சை பெற்றவுடன் அரக்க உடலிலிருந்து பிரமனை யொத்த ஒளி பொருந்திய ஒரு கந்தருவன் விண்ணிடைத் தோன்றுகிறான். பரமனுடைய திருவடி தீட்சை கிடைத்தற் கரியதாகும். ஒப்பற்ற அப்பெரும்பேற்றை நல்லூழ் காரணமாகப் பெற்ற விராதன், அதன் பயனாக