பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கம்பன் எடுத்த முத்துக்கள் "கடுத்த கராம் கதுவ, நிமிர் கை எடுத்து, மெய் கலங்கி, உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலிகொள்ள உறுதுயரால், "அடுத்த பெருந்தனி மூலத்து அரும்பரமே! பரமே!" என்று எடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று 'ஏன்?" என்றாய்? (2564) என்ற பாடலில் விராதன் பேசுகிறான். நீண்டு செல்கின்ற விராதனுடைய துதியில் உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றும் விடை காணமுடியாமல் இருக்கின்ற ஒரு வினாவை விராதன் எழுப்புகிறான். எத்தனை பசுக்கள் நிறைந்திருந்தாலும் ஒரு கன்று தவறாமல் தன் தாய்ப் பசுவைச் சென்றடையும். ஆனால், அனைத்துயிர்களையும் படைத்த தாயாகிய உன்னை அவ்வுயிர்கள் ஏனோ அறிந்துகொள்ளவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த பசுங்கன்றுக்கு உள்ள உள்ளுணர்வு (intution) ஆறறிவு படைத்த மக்களிடம் இல்லையே, இது என்ன மாயை என்று வருந்துகிறான் விராதன். 'தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய! நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா; மாயை இது என் கொலோ? - வாராதே வரவல்லாய்! . . . . (2570) பலபடியாகத் திருவடிப் பெருமை பேசிய விராதன், தன்மாட்டுக் கொண்ட பரிவுணர்ச்சியால் அரக்க உடம்பி லிருந்து வேறு பல பிறவிகள் எடுத்து வளர்ந்து செல்லாமல் நேரிடையாக வீடுபேற்றை அடைய வழிசெய்தது பெருமானுடைய திருவடி சம்பந்தம் என்ற கருத்தை, "ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும் * ... ', ' ' , அப்பு உறையுள் துறந்து அடியேன், அருந் தவத்தால் அணுகுதலால்,