பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கம்பன் எடுத்த முத்துக்கள் வளர்ச்சி அடைந்து ஆறு முதல் எட்டு வரையுள்ள மூன்று நூற்றாண்டுகளில் பெரும் புயலாக மாறியது பக்தி இயக்கம் ஆகும். 'குவியினர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா" என்பது முதலாகச் சங்கப் பாடல்களில் (புறநா.105 நூற்றுக்கணக்கான இடங்களில் இத்தமிழர் கொண்ட கொள்கை பரந்து காணப்படுகிறது. "...யாஅம் இரப்பவை - பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் உருள் இணர்க் கடம்பின் ஒளி தாராயோ! - . (பரிபாடல் 5 :77-80) அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவை ஆகுகதொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! - - - - (பரிபாடல் 14 : 29-32) செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை, உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப் பிரியாது இருக்க-எம் கற்றமோடு உட்னே! - r (பரிபாடல் 18 : 54-56) பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளால் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம் ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக்கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து, ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கப் பெரும்புயலாக மாறியது. முதல் எட்டுச் சைவத் திருமுறைகளும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களும் தோன்றியது இக்காலகட்டத்தில்தான். பரிபாடலில் கண்ட இக்கருத்து குலசேகரப் பெருமானின் உள்ளத்தில் ஊறி, மூன்று பாடல்களில் வெளிவருவதைக் &5/T6:T6uffud. "ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்குழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - - (நாலா, 678)