பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் f岱 பகைவர்களாகிய இராவணாதியர் ஆற்றலை, தவவலிமையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பகைவரைக் குறைத்து மதிக்கும் தவறு நேர்ந்துவிடாமல் காக்க ஒரு வாய்ப்பு வேண்டும். அதனைத்தான் அகத்தியன் செய்கின்றான். மந்திர வலிமை பெற்ற பேராற்றல் உடைய பல படைக்கலங்களை அகத்தியன் இராமனுக்குத் தருகிறான். அவற்றின் ஈடு இணையற்ற சிறப்பை (2535, 2636) அகத்தியன் கூறுவதாகக் கவிஞன் அமைக்கிறான். ஆரணிய காண்டத்தில் மூன்று படலங்களில் இரு பெரிய காரியத்தைக் கவிஞன் சாதித்துவிடுகிறான். தசரத குமாரனும் வைதேகி கணவனும் இலக்குவன் தமையனும் ஆகிய ஒருவனை எத்தகையவன் என்பதை நாம் அறியுமாறு முதலிரண்டு படலங்களில் காட்டிய கவிஞன், மூன்றாவதாகிய அகத்தியப் படலத்தில் பரம்பொருளே யாயினும் மானுட உருத் தாங்கி வந்தமையானும் வில்லெடுத்துப் போர் செய்ய வேண்டிய நிலையில் உள்ள தாலும், அதற்குரிய படைக்கலங்களை அகத்தியன் வழங்கினான் எனக் கூறிவிடுகிறான். இராவணவதத்திற்கு வேண்டிய அனைத்தும் தயாராக உள்ளன. அந்த வதம் நிகழ ஒரு காரணம் வேண்டியுள்ளது. அக்காரணத்தின் விரிவை எஞ்சியுள்ள படலங்களில் கவிஞன் விவரிக்க முற்படுகின்றான். ஆரணிய காண்டத்தில் நான்காவது படலமாக அமைந்துள்ளது சடாயு காண் படலம். பத்தாவதாக உள்ளது சடாயு உயிர் நீத்த படலம், உலக இலக்கியங்களில் விலங்குகளும், பறவைகளும் இடம்பெறுகின்றன என்றாலும், கம்ப நாடன் கற்பித்தது போன்று ஒர் அற்புதத்தை உலக இலக்கியங்களில் மட்டும் அல்லாமல் மூலநூலாகிய வான்மீகத்திலும் காண்டல் அரிதாகும். சடாயு என்ற பறவையை ஒப்பற்ற முறையில் உருவாக்கி, தன் உயிர் புகழ்க்கு விற்ற (5305 சடாயு என்று பேசுமாறு அப்பாத்திரத்தை அமைத்து விடுகிறான். தந்தையை இழந்து வருத்தும் இராகவன், தசரதனின் உயிர்த் தோழனாகிய சடாயுவைச் சிறிய தந்தையாகவே ஏற்றுக் கொள்கிறான். - பிராட்டியின் அலறலைக் கேட்ட சடாயு, அஞ்சேல் என்று கூறி மேலெழுந்து வந்து அவளைத் தூக்கிச் செல்லும்