பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கம்பன் எடுத்த முத்துக்கள் பகைவன் இராவணன் என்பதை உடனே அறிந்து கொள்கிறான். பல்லாண்டு வாழ்ந்தவனாகிய சடாயு, இராவணன் யார் என்பதையும் அவனுடைய ஆற்றலையும் "முக்கோடி வாழ் நாளையும், பெருந்தவத்தையும் யாராலும் வெல்லப்படாய்" என்ற வரத்தையும் நன்கு அறிவன். இவற்றை அறிந்தும் துணை இலக்கணத்தை மனத்துட் கொண்ட சடாயு, இராவணனிடம் பெரும்போர் நிகழ்த்தி அவனுடைய தோர்க்கொடி, பத்துக் கிரிடங்கள் அவனுடைய வில், சாரதி, குதிரைகள் என்ற அனைத்தையும் வீழ்த்தினான் என்றால், அக்கழுகின் வேந்தன் செயற்கரும் செயல்கள் செய்த பெரியவன் ஆகிறான். சிவபெருமானிடம் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை இராவணன் பயன்படுத்தியிராவிட்டால், grrr su srst sit பிராட்டியை இலங்கை வரை கொண்டுசென்றிருப்பானா என்பது ஐயத்திற்குரியது. இத்துணைச் சிறப்புகளையும் ஒரு பறவைக்கு ஏற்றி, உலக இலக்கியங்களில் வேறு எங்கும் காணப்படாத நிலையில் அப்பாத்திரத்தைப் படைக்கிறான் கவிச் சக்கரவர்த்தி. - அச் சிறிய தந்தையும் மைந்தர்களைத் திருத்த வேண்டிய சூழ்நிலையில் கருணை காட்டாமல் கண்டித்துத் திருத்துமாறு ஒரு காட்சியை அமைத்துக் காட்டுகிறான். சினம் என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதவன் இராகவன், மிகக் கடுமையான இராம - இராவணப் போர்பற்றிக் கூறவந்த இராவணன் அபபோரின் இடை இராகவன் மன நிலையையும், முக பாவத்தையும் பின்வருமாறு கூறுகிறான்: எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப் பறித்த போது என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்.ை தெரித்த போது ஒத்தது அன்றிச் சினம் உண்மை தெரிந்தது இல்லை . (7288) இந்நிலையில்கூடச் சினம் கொள்ளா இராகவன் ஒரு முறை சினம் கொள்கிறான். பிராட்டிய்ை இராவணன்