பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is8 கம்பன் எடுத்த முத்துக்கள் அடங்கிவிட்டது. இராம காதை முழுவதிலும் இராகவனை தட்டிப் பேசி அடக்கியவன் சடாயு ஒருவனே ஆவான். இக் காண்டத்தின் ஐந்தாவது படலம் சூர்ப்பனகைப் படலம் ஆகும். இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகை வனத்திடைத் திரிந்து வேண்டுவன கொண்டு மனம் போன வழியில் வாழ்பவளாவ்ாள். இராமனிடம் அவள் வரும்போது கொண்ட கோலமும் நடையும் இராம இலக்குவரை அல்லாமல் வேறு யாராக இருப்பினும் மயக்கும் தன்மை உடையவாகும். அவளைக் கண்டு இராமனே வியக்கின்றான் என்கிறான் கவிஞன். அத்தகைய ஒருத்தியைக் கவிஞன் அறிமுகப்படுத்தும் முறை வியப்பைத் தருவது ஒன்றாகும். நீல மா மணி நிற நிருதர் வேந்தனை மூல நாசம் பெற முடிக்கும் பொய்ம்பினான் மேலை நான் உயிரொடும் பிறந்து, தான் விளை காலம் ஒர்ந்து, உடன் உறை கடிய நோய் அனான் (2739) ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி, மூன்று உலகங்களிலும் ஆட்சி செலுத்தும் நிருதர் வேந்தனாகிய இராவணனை அழிக்க அவன் தங்கையாகிய பெண்ணே வந்தாள் என்று கூறுவது வியப்பு. இத்துணைப் பேராற்றல் படைத்த ஒருவனை - அவனைமட்டு மல்லாமல் அவன் குலமுழுவதையும் வேரும் வேரடி மண்ணும் அழிக்க ஒரு பெண்ணால் இயலுமா என்ற ஐயம் நம் மனத்துத் தோன்றுமானால், அதற்கு விடை கூறுபவன்போல், இவள் அதனைச் செய்வது உடல் வன்மையாலேர் தவ பலத்தாலோ அல்லது வரத்தின் மேன்மையாலோ அல்ல என்று காட்ட வந்த கவிஞன், முடிக்கும் மொய்ம்பினாள் என்ற ஒரு சொல்லால் விடை கூறுகிறான். மொய்ம்பு என்ற சொல்லுக்கு வலிமை என்பதே பொருளாயினும் இந்தச் சந்தர்ப்பம் நோக்கி மனவலிமை, அறிவு வலிமை, சூழ்ச்சி வலிமை என்று பொருள் கொள்ளவும் தகும். வடிவத்தால் பெண், உருவத்தால் சிறியோள் என்று எண்ணிட வேண்டா என்று நம்மை எச்சரிப்பதற்கு அற்புதமான உவமையைக் கையாள்கிறான். எண் சாண் உடம்பில் ஒரு சிறு உறுப்பின் உள்ளே மறைந்து ஒளிந்து காலம் நோக்கிக் காத்திருக்கும் ஒரு நோய், தக்க