பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பேராசிரியர்:அகஞானசம்பந்தன் 12; நிருதர்களை அழிக்கவே தசரதன் புதல்வராகிய இருவர் வந்தனர் என்று (2878) கூறியது உண்மையானது ஆகும். இதனை முதலில் கூறுவதன் நோக்கம் உங்கள் குலத்தை அழிக்க விரதம் பூண்டவனை நீ அழிக்கப் புறப்படுக என்று கூறுவதாகும். இந்நிலையில் கரன் உடனே புறப்பட்டிருந்தால் அடுத்து ஒரு பொய்யைச் சொல்லத் தேவை ஏற்பட்டிருக்காது. தலைவனாகிய இராவணனிடம் கொண்டு சேர்ப்பதற்குரிய ஒரு பரிசுப் பொருளை (அழகே வடிவான பிராட்டியைத் தூக்கிக் கொண்டு மேலெழுந்தேன். அவர்கள் என்னை இவ்வாறு செய்துவிட்டார்கள் என்ற இந்தச் சமயோசிதமான கரனைத் துடித்தெழச் செய்தது. இராமன்மாட்டுத் தான் கொண்ட காமவெறியால் நிகழ்ந்தது என்பதை முழுவதுமாக மறைத்துத் தன்னுடைய அன்னனுக்குச் சிறந்த பரிசுப் தரப் புறப்பட்டதாகக் என்று கூறி முடிக்கிறாள். இதனைக் கேட்ட கரன், 'இவள் எத்தகைய பிழையும் செய்யவில்லை. மையின் மதியின் விளக்கு முகத்தாரை வெளவிக் கொளலும் அறன் (குறிஞ்சிக்கூலி என்ற முடிவில் கரன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இந்த நிலைவரை சூர்ப்பன கைக்கு எவ்விதச் சூழ்ச்சியும் மனத்தில் தோன்றவில்லை. தன்னை அவமானப்படுத்தியவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவளிடம் இருந்தது. அடுத்துள்ள படலம் கரன் வதைப் படல மாகும். மூன்று நாழிகையில் முடிந்த போரை ஏறத்தாழ 192 பாடல்களில் கவிஞன் சொல்லக் காரணமென்ன என்ற வினாவை எழுப்பி இக்கட்டுரையின் முற்பகுதியில் விடை கண்டுள்ளோம். காப்பியத்தில் ஏறத் தாழச் சரி பாதி இடம் கொள்ளும் யுத்த காண்டம் பாட, வரையப்பட்ட வரைபடமாகும் இது என்று கூறினோம். சிலப்பதிகாரம், உதயணன் கதை, சீவக சிந்தாமணி இவை அனைத்திலும் அங்கங்கே போர் பற்றிய பகுதி இடம் பெறுகிறது. செங்குட்டுவன் போரைப்பற்றிப் பாடவந்த அடிகள், அதில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. முன்னும் பின்னும் கிடைக்காத உதயணன் கதையில் இதைப் பெரிதாகப் பாடினாரா என்பதை அறிய வாய்ப்பில்லை.