பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 投3 இறுதியில் கரன் போரிட்டு மாள்கிறான். இந்தப் போரில் தன்னை அனுப்புமாறு இலக்குவன் பல முறை வேண்டியும் அதனை மறுத்து இராகவன் தானே போரிடுகிறான். இலக்குவன் ஒருவனே இதனைச் செய்து முடிப்பான் என்பதை அறிந்திருந்தும் இராமன், அவனுக்கு இடங்கொடாமல் தானே போருக்குப் புறப்படுவது ஏன் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அரக்கர்களை அழிக்க வேண்டும் என்பது இராகவனுடைய குறிக்கோளாக நிலைபெற்றுவிட்ட நிலையில் அரக்கர்களின் வன்மை எத்தகையது, வர பலம் எத்தகையது, போராற்றல் எத்தகையது என்பதை அறிந்துகொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள இராகவன் துணிந்திருக்க வேண்டும். அதனால்தான் தம்பியை நிறுத்தி, தானே புறப்பட்டான்போலும், இவ்வாறு நினைப்பது சரியே என்பதற்கு ஒரு காரணமும் உண்டு. கரனுடன் போர் செய்கையில் அம்புமாரியால் இராமனையே மறைத்துவிடுகிறான். வெகுண்டெழுந்த இராமன் வில்லை வளைக்க அது முறிந்துவிடுகிறது. அரக்கருடன் போர் செய்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கவிஞன் இங்கே கோடிட்டுக் காட்டுகிறான். கரன் வதைப் படலம் பின்னர் வரப்போகும் யுத்த காண்டத்திற்கு முன்னுரையாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். - அடுத்து வருவது சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலமாகும். சூர்ப்பனகை, கரன் முதலியோர் இவ்வளவு விரைவில் மடிவர் என்பதைச் சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அவள் மூளை வெகுவிரைவாகப் பணிபுரிகிறது. இராவணனிடம் சென்று முறையிட்டு இராமனுடன் அவனைப் போர் செய்யுமாறு தூண்டிப் பழி தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறாள். இராவணனைப் பற்றி நன்கு அறிவாள். அறுபட்ட மூக்கைப் பார்த்துக் கரன் புறப்பட்டது போல அறிவில் மேம்பட்டவனாகிய இராவணன் புறப்பட மாட்டான். அவனைப் புறப்படச் செய்ய வேண்டுமானால் அவனுக்கு ஏதாவது நன்மை உண்டு என்று காட்டினால் ஒழியத் தங்கையின் அவமானத்தை ஒழிப்பதற்காகமட்டும் அவன் புறப்படமாட்டான் என்பதை நன்கு அறிந்து