பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 127 தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அமைச்சர்களை அழைத்துப் பேசுகிறான் இராவணன். என்ன பேசுகிறான் என்று கவிஞன் கூறவில்லை. என்றாலும், அந்த ஆலோசனையின்போது அவன் மனம் குழம்பியிருந்தது. அவன் அறிவில் தெளிவில்லை என்பதை மட்டும் "சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன், தெளிவுஇல் நெஞ்சன்" (3236) என்று கவிஞன் கூறுகிறான். தெளிவில்லாத அறிவோடும் குழம்பிய மனத்தோடும் இராவணன் செய்த முடிவுதான் மாரீசனைத் துணைக்கு அழைக்கின்ற செயலாகும். மாரீசனிடம் சென்ற இராவணன் தன் குலத்திற்கும் தங்கைக்கும் ஏற்பட்ட அவமானத்தை இரண்டு பாடல்களில் கூறி, அப்பழிமொழியைத் துடைக்க இராமனின் மனையிவியக் கவரவேண்டும். அதற்கு நீ துணை செய்க என்கிறான். மாரீசன் இதனை ஏற்கவில்லை, பழி துடைக்கப் போர் செய்வது வேறு, ஆனால் ஒருவன் மனைவியைக் கவர்வதனால் குலத்திற்கேற்பட்ட பழியை எவ்வாறு துடைக்க முடியும் பிறர்மனை நயந்த பழியும் அல்லவா உடன் சேரும் என்று பலபடியாகச் கூறுகிறான். கர துரடனர் வதையால் தன் ஆழ்மனத்தில் ஏற்பட்ட கலக்கத்தை வெளிக் காட்டிக்கொள்ளாத இராவணன், இழித்தவர்களாகிய மானுடருடன் போரிடுவது என்பது தனக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த தன் கைகளுக்கும் அவமானம் என்று பேசுகிறான். இறுதியாக மாரீசன் பொன் மானாக வடிவெடுத்துச் செல்கிறான். அடுத்துள்ள இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் தற்பெருமையும் அதங்காரமும் உடையவர்கள் எளிதில் தம்மைக் காட்டிக்கொள்வர் என்ற கருத்துப் பேசப்படுகிறது. துறவி வேடத்தில் பிராட்டியை அணுகிய இராவணன் மிக நல்லவன்போல் நடித்துப் பேசுகிறான். துறவி என்று நினைத்து அப்பேதைப் பெண் அரக்கர்களைப்பற்றி இழிவாகப் பேசுகிறாள். துறவி வேடத்தில் இருக்கும் ஒருவன் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்திருத்தல் வேண்டும். தற்பெருமையும், அகங்காரமும் கொண்ட இராவணன் தன்னை இன்னான் என்று காட்டிக்