பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கம்பன் எடுத்த முத்துக்கள் தனக்குத் துணையாக வந்த இராகவனை, இன்னும் யாரென்று தெரிந்துகொள்ளாமல், தசரத குமாரன் என்றும், இலக்குவனின் அண்ணன் என்றும், தன் நண்பன் என்றும், தன் பகையாகிய வாலியைக் கொன்று தனக்கு ஆட்சியைத் தந்தவன் என்றும்தான் நினைக்கிறானே தவிர, இத்தனையும் செய்த இராகவன் மூலப் பரம்பொருள் என்றோ பகை, நட்புகள் கடந்த பரம்பொருள் என்றோ அவன் அறிந்துகொள்ளவில்லை. பேரறிவு படைத்தவனாகிய வாலி, இராகவனை யாரென்று உணர்ந்துகொண்டான். அதே கணத்தில் தன் தம்பியையும் அறிந்தவன். ஆதலால், தன் உயிர் போவதற்குள் தன் தம்பிக்குப் பிறர் புகட்ட முடியாத நல்லறிவைப் புகட்ட விரும்புகிறான். பகைமை உணர்ச்சி அறவே நீங்கிவிட்ட நிலையில் தன் தம்பியாகிய சுக்கிரீவனை, "வன் துணைத் தடக்கை நீட்டி வாங்கினன் தழுவி, மைந்த! 'ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்; (4072) உறுதி அது உணர்ந்துகோடி" என்று சொல்லத் தொடங்கினான். தான் சொல்லப்போகும் உறுதிப்பொருளை அறிவு கொண்டு ஆராய்ந்து பயனில்லை. அதனை உணர்ந்துகொண்டால் தவிர, கடைப்பிடிக்க முடியாதாதலால் உணர்ந்து கோடி’ என்று கூறத் தொடங்குகிறான். நான்கு, ஐந்து பாடல்களில் அவன் கூறப்போகும் உறுதிப் பொருள் வெறும் சாத்திரங்களைப் படித்தாலோ கற்றாரை அண்டிக் கேட்டதாலோ கிடைத்தது அன்று. இராமன் அம்பின்மூலம் புகட்டிய ஞானமாகும் இது. பன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து அன்றாடம் எட்டு த் திக்குகளிலும் சென்று அட்டமூர்த்தியாகிய பரம்பொருளை மன, மொழி, மெய்களால் வழிபட்டு அதன் பயனாக இப்பொழுது பெற்ற அறிவாகும் (ஞானம்) இது தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமிழ்தத்தை எடுத்தாலும், நன்று எனத் தான் உண்ணாமல் தேவருக்கு ஈந்த பரோபகாரச் சிந்தையால் வாலிக்கு இந்த விநாடி கிடைத்தற்கரிய பரஞான அனுபவம் கிடைத்துள்ளது. * 、.. ・ ・ ・ 。 * . . . . . . - மேலே கூறிய எச்செயலையும் செய்யாதவன் சுக்கிரீவன், இன்ப வேட்டையிலும், நறவம் மாந்திப் புலன்கள் தரும்