பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கம்பன் எடுத்த முத்துக்கள் காட்சிப் பிரமானத்தால் இராகவன் யாரென்பதை நிறுவிய பிறகு, அவனுடைய பரம கருணையை, வள்ளன்மையை, மன்னிக்கும் தன்மையைப் பின்வரும் பாடலில் முதல் மூன்றடிகளில் குறிப்பிடுகிறான். தவறிழைத்தவர்களே மன்னிக்கப்பட்டு அவனருளைப் பெறுவர் என்றால், அவனுடைய திருவடியைப் பற்றிநின்று அவன் எவலைப் புரிபவர் பெறப்போகும் பேற்றைச் சொல்லவும் வேண்டுமோ என்று எடுத்துச்சொல்வதன் நோக்கம் தனக்குக் கிட்டாத வாய்ப்பு அதாவது, அவனது அருகிலிருந்து அவன் குற்றேவலைச் செய்யும் வாய்ப்புத் தம்பிக்குக் கிடைத்திருக்கிறது என்று காட்டி, இச்சந்தர்ப்பத்தை அவன் நழுவவிடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு வாலி பேசும் பாடல் வருமாறு: கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங்கணக்கு 3. இல்தீமை வைகலும் புரிந்துளாரும், வான் உயர் நிலையை, வள்ளல் எய்தவர் பெறுவர் என்றால், இணை அடி இன்றஞ்சி, ஏவல் செய்தவர் பெறுவது ஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து. ஆமோ? (4075) ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இராமனுக்குக் குற்றேவல் செய்யும் இந்த வாய்ப்பு - தனக்குக் கிட்டாத இந்த வாய்ப்பு - தம்பிக்கு எவ்வாறு கிட்டியது என்று சிந்தித்து, அதற்குரிய விடையையும் கண்டுகொள்கிறான் வாலி. சுக்கிரீவன் முன்னர்ச் செய்த நல் ஊழ் காரணமாகவே இந்நிலை அவனுக்குக் கிட்டியது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக, அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்த காலை ? . இருமையும் எய்தினாய் மற்று இனிச் செயற்பாலது எண்ணின், திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி, சிந்தை ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே - (4076) என்ற சொற்களைக் கூறுகிறான்.