பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,152 . கம்பன் எடுத்த முத்துக்கள் போரின் முன்னர் இவ்வாறு பேசிய இராகவன், அது முடிந்த பிறகு வாலியிடம் கற்றறிந்த நீ விலங்கன்று; தேவர்களோடு ஒப்பு ஆவாய் (4054. எனவே, நீ செய்தது. தவறுதான் என்று கூறுவது பொருந்துவதாக இல்லை. மாபெரும் அறிஞனாகிய இராகவன் இவ்வாறு பேசலாமா என்று நம் மனத்தில் தோன்றுவத நியாயமே யாகும். கம்பன் பாடல் முறையில் இதற்கும் ஒர் அமைதி காண முடியும். "பித்தாய விலங்கின் ஒழுக்கினைம் பேசலாமோ” என்று இலக்குவனிடம் இராமன் கூறும் பொழுது வாலியைப் பற்றி ஒன்றும் அறியாத நிலையில் இருந்தான். அனுமான் கூற்றே, வாலியைப் பற்றி இராகவன் மனத்தில் ஒரு வரைப்படம் அமைந்திருந்தது. சுக்சிரீவனிலிருந்து வாலியை வேறுபடுத்தி அந்நிலையில் இராமன் காணவில்லை. அதனால்தான் பித்தாய விலங்கு என்று இருவரையும் ஒரே தட்டில் வைத்தும் பேசினான். தன் அம்பைத் தடுத்து நிறுத்தயதால் வாலியின் பேராற்றலையும், பல வினாக்களைக் கேட்டுத் தன்னைத் திணறச் செய்ததால், வாலியின் அறிவாற்றலையும் தன் உயிர் போவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாததால் வாலியின் மனத்திண்மையையும் இராகவன் நன்கு அறிந்து கொண்டான். அதனாலேயே நீ "விலங்கு அன்று புத்தேனிரே" என்று பேசுகின்றான். - இறுதியாக, வாலி மிகவும் சங்கடமான வினாவை எழுப்புகிறான். இராமனை நோக்கி, வாலி, போனவை போகட்டும். இனி நான் கேட்கப் போகும் ஒரு வினாவிற்குமட்டும் விடை தருவாய்' என்ற முறையில், "வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து வில்லால், எவ்வியது என்னை' என்று வினாவுகிறான். இந்த வினாவிற்கு இலக்குவன் முன்னே வந்து, "உன்னைக் கொல்வதாக உன். தம்பிக்கு வாக்குக் கொடுத்துவிட்டபடியால், நீயும் வந்து சரணம் என்று அடிவில் வீழ்ந்தால் என்ன செய்வது என்ற கருத்தில்தான் மறைந்து நின்று அம்பு தொடுத்தான்" என்று விடை கூறியதாகப் பாடல் அமைந்துள்ளது. இவ் விடை எவ்வளவு போலித்தனமானது என்பதை எளிதில் விளங்கிக்