பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 13. முழுவதுமாகக் காண்கிறோம். . கிட்கிந்தர் காண்டத்தில் உலக மகா காப்பியங்களில் காணப்பெறாத, காண முடியாத இரண்டு பாத்திரங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, அனுமன்; இரண்டாவது, வாலி. சுந்தர காண்டம்.இக் காண்டம் முழுவதிலும், கடைசிப் படலத்தைத் தவிர, வேறு எங்கும், காப்பிய நாயகனைக் காணமுடியாது. ...தொண்டின் உறைவிடமாகவும், தன்னை இழந்த பக்திக்கு ஒரு முழு வடிவமாகவும் உள்ள அனுமன் காண்டம் முழுவதும் விசுவரூபம் கொண்டு விளங்குகிறான். . சுந்தர காண்டம் கடல்தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது. யுத்த காண்டம் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும். யுத்த காண்டம் மட்டும் 4310 ஆகும். என்றாலும், ஆரணிய காண்டத்தில் வரும் கரன் வதை 192 பாடல்கள் சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர் வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 - இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால் போர்பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம் . 4818 பாடல்கள் ஆகும். . காப்பியத்தில் உள்ள 10358 பாடல்களில் போருக்கென்று. 4818 பாடல்கள் பாடுவது தேவையா, பொருத்தமா?. .யுத்த காண்டம் 39 படலங்களைக் கொண்டது. ஒரு படலம் நீங்கலாக ஏனைய அனைத்துப் படலங்களும் ஒன்றுக்கொன்று