பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் f6] வாலியின் இந்த மனமாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை முன்னர் விரிவாகக் கண்டோம் வாலியின் புற மனம், அவன் கூர்த்த அறிவு, வாய் என்ற மூன்றுமே இராமனுடன் வாதம் செய்து, அவன் தவறிழைத்தான், வில்லறம் துறந்தான் என்பவற்றை நிலைநாட்டுவதிலேயே முற்பட்டிருந்தன. எனவேதான், இராமன் கூறிய கட்டுரைகள் அகமனத்துக்குள் போகவில்லை. இந்த வாதம் நடைபெறுகின்ற நேரத்திலேயே வாலியை அறியாமல், அதாவது அவனுடைய புற மணம், அறிவு என்பவற்றிற்கு அப்பாற்பட்டு அக மனத்தின் ஆழத்தில், உணர்வுகளின் அடிப்படையில், ஒர் வளர்ச்சி, செடியாக மரமாக முளைத்துக்கொண் டிருந்தது என்று முன்னர்க் கூறினோம். அகமனத்தின் ஆழத்தில் உணர்வுகளின் மோதலில் நான்கு கரணங்களில் மனம் போக, எஞ்சிய சித்தம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று கரணங்களும் ஒருமுனானப்பட்ட நிலையில் இராம என்ற சொல்லும், அந்தச் சொல்லின் வண்ணமான நீலக் கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண்ணில் வந்த காட்சியும் வாலியை மாற்றத் தொடங்கி, "அன்ன கட்டுரை கருத்துள் கொண்டான்' என்று கூறப்பெறும் அந்த விநாடியில் வாலியை முழுவதுமாக மாற்றிவிட்டன. இந்த மாற்றம் புற மாற்றமோ, செயற்கை மாற்றமோ, அரைகுறை மாற்றமோ அல்ல; மீள முடியாத முழுமாற்றம் இது. இத்தகைய மாற்றம் பெற்றவர்கள், மாற்றம் பெறுவதற்குமுன் காணுகிற காட்சிக்கும், பெற்றபின் காணுகின்ற காட்சிக்கும் கடல் அனைய மாறுபாடு உண்டு என்று கூறினோம். இப்புதிய காட்சியில் பழமையிற் கண்ட பகைமை, சிறுமை, அற்பத்தனம், நியாயமற்றது, கொடுமை என்பனவெல்லாம் மாறிவிடுகின்றன. பகைமை என்ற ஒன்றோ, கொடுமை என்ற ஒன்றோ இவற்றின் மாறாக நட்பு என்ற ஒன்றோ, நன்மை என்ற ஒன்றோ தனியே ஒன்று இல்லை என்பதை இக்காட்சி கண்டவர்கள் அறிய முடியும். இது எவ்வாறு என்பதும், இது இயலுமா என்பதும் புரிந்துகொள்வது கடினம். ஓர் உதாரணத்தின் மூலம் ஒரளவு விளங்கிக் கொள்ளலாம். - - - ... " 11