பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கம்பன் எடுத்த முத்துக்கள் உன்னை யார் என்று நான் அறிவேன். ஆனால் இப்பொழுது என்னை யாரென்று நீ அறியமாட்டாய்' என்று பேசும் பகுதி நாம் முன்னர்க் கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகும். மனிதனாக, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டும் இராகவன் ஒன்றிரண்டு இடங்களில் மனிதனாகவே நடந்துகொள்வது கம்பனது படைப்பு முறைக்கு ஏற்றதாகும். இலக்குவன் தடுத்தும் மாய மான் பின்னே சென்றதும் சூர்ப்பணகையிடம் அந்தணர் பாவை நீ அரசரின் வந்தவன் யான் (2780) எனப் பேசுவது அவன் மனிதனாக நடந்து கொள்ளக் கூடிய பகுதி ஆகும். அதேபோன்று வாலி வதையிலும் அவன் நடந்துகொள்வதாக நினையவேண்டி யுள்ளது. சவரியின் அறிவுரைப்படி சுக்கிரீவன் இருக்கும் இடம் வந்த இராமனை முதன் முதலாகச் சுக்கிரீவன் சந்திக்கிறான். அவனிடம் இராமன் பேசிய முதல் வார்த்தை, கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம் ஐய! நின்-தீரும்' (3809) இந்த அடிகள் தன் துயரைப் போக்க உதவும் மலை போல நம்பி வந்தான் என்பதைக் குறிக்கின்றன. அதனால் இராகவனுடைய இந்த வேண்டுகோளைக் காதிற்கூட வாங்கிக்கொள்ளாத கக்கிரீவன், ஒரு பாடல் முழுவதும் தான் படும் துன்பத்தைப் பெரிதாகக் கூறி, உயிரை விடத் தைரியம் இல்லை. ஆகவே நின்னிடம் சரணம் புகுந்தேன் என்று கூறுகிறான். இந்த நிலையில் யாரால் இந்தத் துயரம் சுக்கிரீவனுக்கு நிகழ்ந்தது என்பதை அரைகுறையாக இராமன் அறிந்திருந்தானே தவிர, வாலி கக்கிரீவர் பகைமை முதலியனவற்றையும் அதன் காரணத்தையும் இராமன் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், இரண்டு பாடல்களில் இராமன் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்குகள் நடுநிலையுடன் காப்பியத்தைக் கற்பவருக்கு வியப்பைத்' தருவதாகும். சுக்கிரீவனுடைய துன்பத்திற்குக் காரணம் யார் என்பதை அறிந்துகொள்ளும் முன்னரே தசரத குமாரன்,