பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கம்பன் எடுத்த முத்துக்கள் தொடர்புடையதும் பொருத்தமுடையதுமாக அமைந்துள்ளன. வ.வே.சு. ஐயர்கூட இப் படலம் (இரணியன் வதைப் படலம்) காப்பியத்தோடு தொடர்பின்றித் தனித்து நிற்பதைச் சுட்டுகிறார். அப்படியானால், உலகில் மிகச் சிறந்த காப்பியப் புலவனாகிய கம்பனுக்கு இப் படலத்தின் பொருந்தாமை தெரியாமலா இருந்திருக்கும்?. - ...எதிரணியில் ஈடு இணையற்று விளங்கும் இராவணன், வீடணன், கும்பகருணன், இந்திரசித்து, என்ற பாத்திரங்கள் இக் காண்டத்தில் படைக்கப்பட்டுள்ளன. . சில பகுதிகளைமட்டும் தொட்டுக்காட்டுவது பொருத்த முடையதாக இருக்கும். மேலே தரப் பட்டுள்ள மேற்கோள்களைக் கவனமாகக்ப்படித்துப் பார்த்தால், இந்தநூலின் கட்டமைப்பும் கருத்தமைப்பும் என்ன என்பது தெளிவாக விளங்கும். காண்டங்களின் அமைப்பை எடுத்துச் சொல்கிறார்; சில காண்டங்களைப் பற்றிச் சொல்லும்போது வடிவமைப்புக்கு (Structure) முதன்மை கொடுக்கிறார்; வேறு சில காண்டங்களில் சில பாத்திரங்களை விதந்து கூறி விளக்குகிறார்; மற்றுள்ள காண்டங்களில் நுவலும் பொருளுக்கு முக்கியத்துவம் தருகிறார். எந்தெந்தக் காண்டத்தில் எந்த்ெந்தக் கூறுகள் கவனத்துக்கு உரியனவோ அந்தந்தப் பாங்கில் நூல் அமைந்திருக்கிறது. பதசாரம்: திறனாய்வாளரின் விளக்கத்திலே கவிதையின் பல பாங்குகள் விளக்கம் பெறும். அவற்றுள் ஒன்று பத சாரம் காட்டுதல். இந்தச் சொல் ஏன்? வேறு சொல் ஏன் பொருந்தாது; சொல் நிரல் அமைப்பு எந்த நுட்பத்தைக் காட்டுகிறது? சொல் நிரல் மாற்றக்கூட்ாமைக்கு என்ன காரணம் ? - என்பன போன்ற சிந்தனைகளால் பத சாரம் சொல்வது மரபு. இந்தக் கலையின் எவரெஸ்டு எல்லையைக்