பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கம்பன் எடுத்த முத்துக்கள் இராமன் வந்துவிட்டான். இம்முடிவை இராமன் விரும்பி ஏற்றுக்கொண்டான் என்றோ கடமையை நிறைவேற்றப் போகிறோம் என்று மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான் என்றோ கூறுவது பெருந்தவறாகும். மறைந்து நின்று அம்பு எய்தல் வில் அறம் துறப்பதாகும். வில் அறம் துறக்காமல் இருக்க வேண்டுமானால் வாலியைக் கொல்ல இயலாது. அது நடைபெறவில்லையானால் 'தாரமிோடு தலைமையும் தருகிறேன்' என்று சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது. வாக்கை நிறைவேற்றுவதா? அல்லது வில்லறம்துறப்பதா? என்பதுதான் இராமன் அகப்பட்டுக்கொண்ட தர்மசங்கட நிலையாகும். சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கின் அடிப்படையில் சவரியும் கவந்தனும் ஆற்றுப்படுத்தியதன் நோக்கம் அமைந்துள்ளது. எனவே, சுக்கிரீவனைத் துணைகோருவது இன்றியமையாதது என்ற கருத்தில்தான் அவனுக்கு வாக்குக் கொடுத்தான் இராகவன். யாராக இருப்பினும், அவர்களைத் தன் வில் கொண்டு வெல்ல முடியும் என்ற துணிவுடன், இராகவன் சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தான். அவன் சற்றும் எதிர்பாராமல் பகைவனாகிய வாலிக்கும் அவனுக்கும் இடையே நல்வலம் பாகம் எய்தும் தடை ஏற்பட்டது. இராகவனேயானாலும் இத்தடையை வெல்ல முடியாது. தன் வலியும் பகைவலியும் தீர எண்ணிப் பார்த்த இராகவன் மறைந்து நின்று அம்பு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்துகொண்டான். ஆதலின் இது என் கருத்து என்று கூறிவிட்டான். இச்செயல் வில்லறம் துறக்கும் செய்கையாகும் என்பதையும் இராகவன் நன்கு அறிந்திருந்தான். அறிந்தே செய்த செயல் ஆகும் இது. வில்லறம் துறந்து ஏதோவொரு குரங்கை-சுக்கிரீவன் பகைவனாகிய வாலியைக் கொல்லப் போகிறோம் என்று நினைத்தானேயொழிய, அத்தகைய பகைவன் கல்வி, அறிவு, பண்பாடு, உபகாரச் சிந்தை, தன்னலமின்மை, அஞ்சாமை ஆகிய பண்புகளில் தலைநின்றவன் என்பதையும் சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள