பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 173 வேண்டும் என்று நினைத்து அதனைச் செயலாற்ற நினைப்பதற்கு முன்னர் நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றுவிட்டன. அதன் முடிவில் வாலி “வானுக்கு அப்புறத்து உலகன்" (4093) ஆகப்போகிறான். எனவே, இராமன் தன் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நிறைவேற்ற வகையறியாது மன வருத்தத்தோடும் மயக்கத்தோடும் இருக்கின்ற நிலையில், வாலியின் மைந்தனாகிய அங்கதன் அடைக்கலப் பொருளாக இராமனிடம் ஒப்புவிக்கப் படுகிறான். தந்தையாகிய வாலியிடம் சொல்ல வேண்டியதை மைந்தனிடம் எவ்வாறு சொல்வது? தன் மனநிலையைச் சில சொற்களில் கூறவேண்டும். வாலியிடம் கூறியிருந்தால் அதன் உட்பொருளை அவன் அறிந்துகொண்டிருப்பான், ஆனால், முன்பின் அறியாத சிறுவனாகிய அங்கதனிடம் அதுபற்றிப் பேசுதல் முறையன்று என்றாலும், ஏதாவது ஒரு வகையில் தன் செயலுக்குக் கழுவாய் தேடவேண்டும். என்று நினைத்த இராகவனுக்குச் சட்டென்று ஒர் யோசனை தோன்றுகிறது. ஒரளவு பழகியவனும், தம்பியருள் ஒருவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவனும், தன்னால் தாரமும், தலைமையும் பெற்றவனுமாகிய சுக் கிரீவனிடத்தில் கூடக் கூற முடியாதவைகளை, செய்ய முடியாதவொரு செயலை, முன்பின் தெரியாதவனும், சில விநாடிகளுக்கு முன்னரே தன் பால் ஒப்புவிக்கப்பட்டவனுமாகிய அங்கதளிடம் கூறுகிறான். ஒப்பற்ற ஒரு செயலைச் செய்கிறான். இராகவன் தன் உடைவாளை அங்கதனிடம் தந்து நீ இது பொறுத்தி என்று கூறியதாகக் கவிஞனின் பாடல் அமைந்துள்ளது. இச்செயலைச் செய்கின்ற விநாடியில் வாலி உயிரை விடும் நிலையில் உள்ளான் என்பதும் அறியத்தகும். இதனைக் கவிஞன், ஒரு நாடகமுறையில் ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறான். நாட்கப் பாத்திரங்கள் மூவர்: முக்கியப் பாத்திரமாகிய இராகவன், எல்லாவற்றையும் கண்டு கேட்டுக்கொண்டே சில விநாடிகளில் உயிர்த் துறக்கப் போகும் வாலி, நடந்தது இன்னதென்று புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமானவொரு மனநிலையில் இராமனிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட சிறுவன் அங்கதன். குழம்பி