பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 15 கண்டவர் அ.சஞா. அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டோரும் அவர் படைத்த நூல்களைப் படித்தோரும் இதனை நன்கு அறிவர். - இந்த நூலிலும் பல இடங்களில் பத சார நயம் உண்டு. ஒரே ஒர் இடத்தைச் சுட்டுவோம். உயிர் பிரியும் நிலையில் அறிவு பெற்றுத் தெளிந்ததாக வாலி பேசுகிறான். இங்கே எழுதியுள்ள வண்ணம் வெள்ளை யாக அவன் சொல்லவில்லை. ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவி போம் வேலைவாய் அறிவுதந்தருளினாய் என்கிறான், வாலி. வாளி எய்தவன்தானே கொன்றவன் . ஆவி போக்கியவன்? ஆவி போக்கும் வேளையில் அறிவு தந்தருளினாய் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? r 'அம் புதான் கொன்றது என்று நினைத்திருந்தால் ஆவி போக்கும் வேலைவாய் என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆவி போம் வேலை என்று கூறியதால் இவ் உலகை விட்டுப் போகவேண்டிய நேரம் வந்து விட்ட காரணத்தால் என் ஆவி போகின்றது. இதற்கு இராமன் எய்த அம்பு காரணம் அன்று', என்பதை ஆவி போம் வேலைவாய் என்ற சொற்களால் நன்கு தெரியப்படுத்தி விடுகிறான். . இந்த விளக்கத்திற்கு முன்னும் பின்னும் உளவியல், ஆன்மீகம் சார்ந்த விளக்கங்களையும் ஆசிரியர் வரைந்துள்ளார். பதத்தின் சாரத்தைப் பிழிந்து காட்ட முன் பின் விளக்கங்களும் உதவுகின்றன. இதுபோன்ற இடங்கள் இந்நூலிலே பல உள. அமைப்பியல் விளக்கம் காப்பியக் கவிஞன் கையாளும் சொற்களின் சாரத்தை விளக்குவது போலவே, காப்பிய அமைப்பியலை விளக்கிச்