பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 177 கறுத்த மாமுனி கருத்தை உன்னினான் வசிட்டன் என்று கவிஞன் கூறுவதால், சினத்தின் உச்சியில் நின்ற விசுவாமித்திரன் தசரதனைச் சபித்துவிடுவானோ என அஞ்சிய வசிட்டன், விசுவாமித்திரனை நோக்கிப் பொறுத்தி நீ எனக் கூறுகின்றான். நீ இதனைப் பொறுத்தருள்வாயாக' என்பதே இதன் பொருளாகும். அறியாமை காரணமாகவும், பிள்ளைப் பாசம் காரணமாகவும் தசரதன் செய்த பிழைக்கு அவன் சார்பாக வசிட்டன் நீ பொறுத்தி என வேண்டுகிறான். இராகவன் செய்த செயல் அறியாமையால் செய்ததன்று; அறிந்தே செய்ததாகும். பிள்ளைப் பாசம் போல அங்கே பாசம் எதுவும் இல்லை. அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்று அகமனத்தின் அடியில் தோன்றிய எண்ணத்தை நிறைவேற்றவே வேறு நின்று எவ்விடத் துணிந்தான். அது வில்லறம் துறந்த செய்கை என்பதை உணர்ந்தே செய்தானாகலின், அங்கதனிடம் நீ இது பொறுத்தி எனக் கேட்டுக்கொள்கிறான். பெரியதொரு நன்மை பெறவேண்டிச் சிறிய தவறுகளைச் செய்வது அரச நீதிகளுள் ஒன்று, என்றாலும் நடைபெற்ற பிறகு நீ இது பொறுத்தி என்று தசரத குமாரன் கூறுவதால் அவன் பெருமை மலையை விட உயர்ந்துவிடுகிறது என்பதை மனத்திற் கொள்ள வேண்டும். -

இதனையடுத்து அரசியற் படலத்தில் காணப்படும் மற்றொரு பாடலும் பலரைக் குழப்புவதாக உள்ளது. அனைத்தும் முடிந்த பிறகு சுக்கிரீவனுக்கு முடிசூட்டும் பணியும் நிறைவேறிவிட்டது. அந்த நிலையில் இரா இலக்குவர்களைக் கிட்கிந்தைக்கு வருமாறு சுக்கிரீவன் அழைக்கிறான். அப்போது இராமன் பல்வேறு காரணங்களைக் காட்டி, கிட்கிந்தையில் வந்து அரச போகங்களை அனுவவிக்க முடியாத நிலையில் தான் இருப்பதைக் கூறுகிறான். மேலும், மற்றோர் மலையிடைச் சென்று தங்கித் தவம் மேற்கொள்ளப்போவதாகவும் கூறுகிறான். அவன் கூறிய பல்வேறு காரணங்களுள் ஒரு காரணத்தை அறிவிக்கும் பாடல் வருமாறு: