பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 183 வீரமேயாகும். ஞானத்தில் வீரம் காட்டுவது தன் முத்தியை நாடாது பிறருடைய பிறவித் தளைகளை அறுப்பதே என்று மொழிவர். -விவேகானந்த ஞான தீபம் xy மேலும் விவேகானந்தர் கூறுவது: .அனுமானை ஒரு கோணத்திலிருந்து நோக்கினால், அவர் சேவை என்னும் உயர்ந்த கொள்கையே உருவர்னாற்போலக் காணப்படுகிறார். வு V பக். 218 சங்க காலத்தில் தொடங்கிப் பாரதியார் காலம் வரை தமிழர்களால் போற்றிப் பேசப்படும் தொண்டு என்ற பண்பிற்கு வடிவு கொடுத்தவன் கம்பநாடனே ஆவான். வடிவு கொடுப்பதிலும் ஒரு தனிச்சிறப்பைக் காண்கிறோம். எதிலும் நிலையில்லாமல் தாவித் திரியும் மனப்பான்மையைக் குரங்கு மனப்பான்மை என்று கூறுவது மரபு. அப்படியிருக்கக் குரங்குப் பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு, தொண்டு என்னும் பண்பிற்கு ஒரு வடிவமாக அமைத்துவிட்டான் கவிச்சக்கரவர்த்தி இராமபிரானுக்குத் தொண்டு செய்தவர்கள் மிகப் பலர் ஆவர். மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டிய இலக்குவன், குகன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வருள்ளும் தொண்டின் சிறப்பைக் காண முடிகிறது. இராம அனுஜனாகிய இலக்குவனைப் பொறுத்தப்ட்டில் அவன் தொண்டின் ஆழத்தில் நான் என்பது தலை நிமிர்ந்து நிற்கக் காணலாம். கைகேயியையும், பரதனையும் கொன்று, பட்டத்தை இராமனுக்குத் தருகிறேன்' என்னும்போதும், காட்டிலுள்ள தங்களை வெல்லப் பரதன் வருகிறான் என்று இராமனை எதிர்த்துப் பேசும்போதும் அவனது தொண்டிற்குச் சிறிது குறை ஏற்பட்டுவிடுகிறது. - - குகனது தொண்டு ஈடு இணையற்ற தாயினும் இராமனை யாரென அறிந்துகொள்ள முற்படாது தாய் அன்புபோல் உள்ள தொண்டாகும். அறிவினால் ஆய்ந்து பார்க்கும் இயல்பு அவனிடம் இல்லை. சுக்கிரீவனைப் பொறுத்தமட்டில் தொண்டு செய்வதாக நினைத்துக் கொண்டு இராகவனுக்கே