பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 189 இராமன் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு, அப் பெருமானுக்குத் தொண்டு செய்வதையே த்ன் வாழ்நாளின் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு விட்டான் அனுமன் என்றாலும், தான் பணிபுரியும் சுக்கிரீவனை விட்டு அகன்று விட இத்தொண்டன் விரும்பவில்லை. சுக்கிரீவன்மீது கொண்ட இராச விசுவாசம் இப்பரம்பொருளோடு அவனைச் சேர்த்துவைத்து, இந்த உலகில் அவன் குறை தீர்த்துவைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறது. சந்தேகப் பிராணியாகிய சுக்கிரீவனிடம் இராமஇலக்குவர் வருகையை அறிவிக்கச் சென்ற அனுமன், சுக்கிரீவனிடம் பேசும் முதல் வாக்கியம் அவனுடைய பெருமையையும், நுண்மாண் நுழைபுலத்தையும், தன் தலைவனான சுக்கிரீவனை எவ்வளவு துல்லியமாக எடையிட்டிருந்தான் என்பதையும் அறிவிக்கின்றன. இராமன் பரம்பொருள் என்பதையோ, தன்னை அண்டியவர்களை மீளா நெறியுய்ப்பவன் என்பதையோ அனுமன் முதலில் கூறவில்லை. காரணமென்ன? உயிரின்மீது பெரும்பற்றுக் கொண்டவனும், இன்ப வேட்டையில் முனைந்து செல்பவனும், பதவி எப்போது கிடைக்கும் என்று ஒயாது எண்ணுபவனும், தன் பகைவனை யார் துணை கொண்டு எப்போது அழிக்க முடியும் என்று ஓயாமல் சிந்திப்பவனுமாகிய சுக்கிரீவனிடம் பரம்பொருள் மானுட வடிவம் தாங்கி வந்துள்ளது என்றால், அச்சொறகள் அசசெவியில் ஏறா. அதுபற்றி அவன் கவலைப்படப்போவதும் இல்லை; என்றாலும், இராகவனிடம் சுக்கிரீவனை அனுப்ப வேண்டும். அதற்கு வழி யாது என்று ஆராய்ந்த அனுமன் நல்லதொரு முடிவிற்கு வருகிறான். ஒவ்வொரு விநாடியும் வாலிபாற் கொண்ட அச்சத்தால் நைந்து கொண்டிருக்கும் சுக்கிரீவனிடம் இவன் பகைவனாகிய வாலியை ஒழிக்க ஒருவன் வந்துள்ளான் என்றால், அவனைக் காண உடனே சுக்கிரீவன் புறப்பட்டு விடுவான் என்பதை நன்கு அறிந்த அனுமன், சுக்கிரீவனிடம் சென்று தசரத குமாரர் யாவரென்று அவர்கள் வரலாற்றை முதலில் கூறாமல் வாலிபற்றிப் பேசுவது மனவியலை நன்கு அறிந்த அனுமனின் சாதுரியத்திற்கும் சமயோசித புத்திக்கும் எடுத்துக்காட்டாகும். -