பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 191 உரியது. காலம் கருதி இடத்தாற் செய்தால் ஞாலம் கருதினும் கைகூடும் என்பர் வள்ளுவர். அதனை அற்புதமாகக் கையாளுகிறான் அனுமன். இராம-இலக்குவர்களை விருந்துண்ணுமாறு தன் இருக்கைக்கு அழைத்தான் சுக்கிரீவன். அவர்களை அமரச் செய்து தானும் உடன்அமர்ந்து உண்ண, அனுமன் முதலியோர் பரிமாறினர். பெரியோர்களை விருந்துக்கு அழைத்தால் இல்லத்தரசிதான் பரிமாற வேண்டும். பெண் வாடையே இல்லாமல் ஆண்களே பரிமாறுவதைக் கண்ட இராகவன் மனம் மிகவும் கவன்று, நொந்து, விருந்தும் ஆகி, அம்மெய்ம்மை அன்பினோடு இருந்து நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய்கொலோ நீயும் பின்? (3820) என்று கேட்கிறான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தை உண்டாக்கியவன் அனுமனே ஆவான். இராகவன் கேளாமல் தானே வாலியின் வரலாற்றையும் அண்ணன் தம்பி பகைமையையும் தம்பி மனைவியை அண்ணன் கவர்ந்தமையும் கூறினால் அது எந்த அளவுக்கு இராமனைப் பாதிக்கும் என்று தெரியாது. வாலியைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இராகவன் மனத்தில் தோன்ற வேண்டுமேயானால் அதற்குரிய நிலைக் களத்தை அமைக்க வேண்டும். இந்த விருந்தை ஏற்பாடு செய்து, ஆண்களே பரிமாறும் சூழ்நிலை உருவாக்கி, இராகவன் மனத்தில் எல்லையற்றதுயரத்தையும் நோவையும் உண்டாக்கி, நீயும் பூவையைப் பிரிந்துளாயோ என்று கேட்குமாறு செய்து, அற்புதமான நிலைக்களத்தை உருவாக்கிவிட்டான் அனுமன். இந்த நிலையில் பூவையை இழந்ததற்குரிய காரணத்தையும், அதனைச் செய்தவன் யாரென்பதையும் கூறினால் இராகவன் மனத்தில் வாலியைக் கொன்று சுக்கிரீவன் தாரத்தை மீட்டுத் தருதல்வேண்டும் என்று உறுதிகொள்வது நிச்சயமாக நடந்தே தீரும். இந்த மாபெரும் செயலைச் செய்தவன் அனுமனாகிய தொண்டனே ஆவான்.