பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 17 இணைத்துக் காட்டுவது, 2, 13 ஆம் படலங்களை இணைத்துக் காட்டுவது போன்ற இடங்கள் காப்பிய அமைப்பியல் விளக்கத்துக்கு எடுத்துக்காட்டான இடங்கள் என்பதை உணரமுடிகின்றது. - அமைப்பியல் விளக்கத்தில் வெற்று உருவ விளக்கம் மட்டுமல்லாமல், அமைப்பியல் விளக்கத்திலேயே குறிப்பு நயம் காட்டுவது இந்த நூலின் சிறப்பு என்று கூற வேண்டும். 'ஆரணிய காண்டத்தின் பதின்மூன்று படலங்களில் முதற் படலமாகிய விராதன் வதையும் பன்னிரண்டாவது படலமாகிய கவந்தன் படலமும் குற்றத்தைச் செய்து தண்டனை அனுபவித்தவர்க்கு விடுதலை நல்கியதைக் காட்டும். ஒரு பிறப்பிலிருந்து மற்றோர் உயர்ந்த பிறப்பிற்கு இராகவன் இவர்களை அனுப்பியதைக் காட்டும். இரண்டாவது, பதின்மூன்றாவது படலங்கள் ஞானம், பக்தி ஆகியவைகளில் முதிர்ந்து நிற்பவர்களுக்கு இறையருள் தேடிவந்து வீடு - நல்கும் என்று அறிவுறுத்தும் பகுதிகளாகும்.” என்ற ஆரணிய காண்ட அமைப்பியல் விளக்கமும், w "சுந்தர காண்டம் கடல்தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது. இந்தப் பெயர் வைப்பு முறையிலும் கம்பன் ஏதோ உட்கருத்தோடு இப் படலப் பெயர்களை வைத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடல் என்று கூறின வுடன் பிறவிக்கடல்' என்பது பலருடைய உள்ளத்திலும் தோன்றி நிற்கும். . வள்ளுவன் கணக்குப்படி பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர் என்பது தேற்றம். இக் கருத்தை மனத்துட் கொண்ட கம்பநாடன் கடல்தாவு படலம்' என்று முதற் படலத்திற்குப் பெயரிட்டு,