பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கம்பன் எடுத்த முத்துக்கள் வெறுப்பை ஒதுக்கிவைத்து அவர்களை எடைபோடவேண்டும். ஒரு நிகழ்ச்சியைக் காணும்பொழுது, தான் அதில் ஈடுபட்டுவிடாமல் புறநிலையாக நின்று கணித்தலே அமைச்சனுக்கு இலக்கண மாகும். அனுமன் இத்துறையில் எத்துணை முதிர்ந்துள்ளான் என்பதைக் கவிச்சக்கரவர்த்தி ஊர் தேடு படலத்தில் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறான். இராகவனை முதலில் பார்த்த வினாடியி லிருந்தே தன்னைப் பறிகொடுத்துவிட்டு அவனுடைய சுக துக்கங்களில் முழுவதுமாகப் பங்கு கொண்டு பணி புரிந்துவரும் அனுமனைப் பொறுத்தமட்டில் இராமனுக்கு இடுக்கண் செய்த இராவணனும் அவனுடைய நாடாகிய இலங்கையும் அந்நாட்டு மக்களாகிய அரக்கரும் முழுப் பகைவர்கள் ஆகிவிட்டார்கள். இராமன் என்ற அரசனுக்கும் இராவணன் என்ற அரசனுக்கும் உள்ள பகையன்று இது. இராகவன் மனைவியை வஞ்சித்துக் கவர்ந்துசென்றமையால் மிகக் கீழோர் செயலில் ஈடுபட்டுவிட்டான் இராவணன். இந்த மாபெரும் தவறைச் செய்தவன் சாதாரணப் பகைவன் அல்லன். எனவே, அவன் மாட்டு அனுமன் பகைமை பாராட்டுவது நியாயமானதே ஆகும். காழ்ப்பு உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி, சினம் ஆகியவற்றோடு நிரம்பிய மனநிலையில்தான் அனுமன் இலங்கையுள் புகுகிறான். என்றாலும் என்ன? இரவு நேரத்தில் உறங்கிக் கிடக்கின்ற கும்பகருணன் (4955), வீடணன் (1969), இந்திரசித்தன் (4972), இராவணன் (5037) ஆகிய நால்வரையும் அவரவர் உறங்குமிடத்தில் மறைந்துநின்று காணுகிறான். இந்த மன நிலையிலும் முதன்முதலாக இந்நால்வரைப் பார்க்கும்பொழுது அவர்கள் ஆற்றல் முதலியவற்றைத் துல்லியமாக எடைபோட்டுவிடுகிறான். உறங்குகின்ற கும்பகர்ணனைப் பார்த்து, அவன் யாரென்று அறிந்து கொள்ளாத் நிலையிலும் சுத்த வீரனாகிய அனுமன் கும்பகர்ணனை மிக அற்புதமாக எடைபோடுகிறான். அரக்கர் கோனாகிய இராவணனோ இவன் என்று நினைத்த அனுமன், அந்த எண்ணத்தை ஒதுக்கி இவன் யாரென்று தெரியா விட்டாலும் திரிமூர்த்திகளில் ஒருவருக்கு ஈடு சொல்லக் கூடியவன் இவன் என்ற கருத்தில், ஏவனோ இவன்?