பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廿8 - கம்பன் எடுத்த முத்துக்கள் தாவினவர்கள் என்ன பயனைப் பெறுவார்கள் என்று கூறுபவன்போலக் கடைசிப் படலத்திற்குத் திருவடி தொழுத படலம்' என்று பெயரிட்டான். பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறியப்பெற வேண்டும்..." என்ற சுந்தர காண்ட அமைப்பியல் விளக்கமும் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தின் குறிப்புப் பொருளைச் சுட்டிக் காட்டுகின்றன. - அயோத்தியா காண்ட அமைப்பியல் விளக்கத்திலும் இதுபோன்ற ஒரு விளக்கம் காணலாம் : "இந்தக் காண்டம் மந்திரப் படலத்தில் தொடங்கி, திருவடி சூட்டுப் படலத்தில் முடிகின்றது. கதைப்போக்கில் இந்தப் பெயர்கள் அமைந்திருந்தாலும், கதையை மறந்துவிட்டுப் பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டால்கூட, ஒரு புதுமையான சிந்தனையைத் தோற்று விக்கின்றது. 'மந்திரத்தில் தொடங்கினால் திருவடி சூடலில் முடியும் என்ற எண்ணத்தை நம்முடைய மனத்தில் தோற்றுவிப்பது போல இந்தப் படலங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன." மேற்போக்காகப் பார்த்தால், வலிந்து காணும் நயம் போலத் தெரியும். ஆனால், எதனையும் நுண்மாண்நுழைபுலம் கொண்டு படைப்பவரும் படிப்பவரும் இந்தப் புதைபொருளை எளிதில் புறக்கணித்துவிட் முடியாது. நல்ல samsos (Goodpoetry), GuGârzestsog (Greatpoetry) இரண்டின் தரமும் கம்பராமாயணத்தில் காணமுடியும் என்பதை மறந்திடக் கூடாது. - - - -