பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - கம்பன் எடுத்த முத்துக்கள் இம் முன்னுரைகாரனின் கணிப்பிலும் இப் படலம் சிக்கியதுண்டு. இராமாயணச் சிந்தனை). அண்மையில் மேதகு நடுவர் இஸ்மாயீல் அவர்களும் இரணியன் வதைப்படலம் ஏன்' எனற தலைப்பில் குறுநூலே எழுதியுள்ளார்; விரிவாக எழுதவிருப்பதாகவும் செய்தி. - . இந் நூலாசிரியர் அசஞா. அவர்களின் திறனாய்வு வலையிலே இரணியன் சிக்காமல் இருப்பானா? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் (1984ல் கம்பன் - புதிய பார்வை' என்ற நூலிலே இந்தச் சிக்கல் பற்றி ஆராய்ந்திருக்கிறார். (பக் 202 - 206). இப்பொழுது வெளிவருகின்ற இந்த நூலிலும் இரணியன் வதைப் படலம் ஏன்? புதியது புனைதலாக அமைக்க வேண்டும் என்பது பற்றி எழுதியுள்ளார். - 'அத்வைதமும் உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ஆம் நூற்றாண்டில், தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன் பொருத்தினான் என்பதனை அறியலாம். வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப் பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே - காரணமாக இருந்தது போலும்” இது இந்நூற்றாண்டின் அகத்தியராகிய அ.சஞா. தரும் விளக்கத்தின் முடிவுநிலை, . . . . - காப்பியக் கட்டமைப்பு நோக்கில் பேராசிரியர் அவர்கள் இதுபற்றி மேலும் விரிவாக ஆராய்ந்து எழுத இடமிருக்கிறது. பேராசிரியர் அவர்களே "இதுவே காரணமாக இருந்தது" என்று முடித்துவிடாமல், ஒப்பில்போலி இணைத்து." காரணமாக இருந்தது போலும்" என்று வரைந்திருப்பது நம் கவனத்துக்கு உரியது. . . . . . . . . . . . . . . . . இனி, காப்பியத்தின் கட்டமைப்புப் பற்றிய சிக்கல் எழுப்புவது மிகப்பெரிய யுத்த காண்டமாகும். யுத்த காண்டம்