பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 227 'உண்மையில் இவன் குரங்கு அல்லன். அயன் படையை வெல்லும் ஆற்றல் உடையவனேனும், மரியாதை காரணமாக அடங்கியிருக்கிறான்' என்பதை அறிந்து கொண்டான். இந்த நிலையில் தந்தையிடம் அனுமனைக் கொண்டு சேர்க்கிறான். இந்த விநாடிவரை அனுமனைச் "சஜ்ளியில் உறைதரு குரங்கு” என்று இராவணன் பேசிவந்துள்ள்ான். அனுமனை நேரே பார்க்கும்போது ஆணவத்தின் வடிவமாகிய இராவணன், பகையைக் குறைத்து மதிப்பிடும் அத்தவற்றை மறுபடியும் செய்துவிடல் ஆகாது என்ற முடிவுக்கு வந்தான் அத் தவப்புதல்வன். எனவே, தந்தையின் எதிரே கொண்டு நிறுத்தி அதிகமான வார்த்தைகள் பேசாமல் ஒரேயொரு வாக்கியத்தைக் கூறித் தந்தையை வணங்கிவிட்டு நின்றான் என்று கூறுகிறான், கவிஞன். "அரி உருவான ஆண்தகை, சிவன் என்ச் செங்கணான் எனச் செய் சேவகன் இவன்" என்ற சொற்களால் எதிரே நிற்பவனை அறிமுகம் செய்கிறான் (5871). ஒரு பாடலில் ஒரு நாடகக் காட்சியையே உருவாக்குகிறான் கவிஞன். அறிமுகம் செய்பவன் ஒருவன். அறிமுகப்படுத்தப்படுபவன் ஒருவன். யாரிடம் அறிமுகம் செய்யப்படுகிறதோ அவன் ஒருவன். இம்மூவரில் யாரை வியப்பது என்றுதான் தெரியவில்லை. உறங்குகின்ற நிலையில் ஒருவனைப் பார்த்துக் கலைகளை யெல்லாம் கற்றவனும், பேரரறிவாளனுமாகிய அனுமன் "இளைய வீரனும், ஏந்தலும், இருவரும் பல நாள் உளைய உள்ள போர் இவனோடும் உளது" (1975) என்று யாரைப்பற்றிக் கூறினானோ அவன்தான் இப்பொழுது அனுமனை அறிமுகம் செய்துவைக்கிறான். யாரிடம் அறிமுகம் செய்துவைக்கிறான் என்று கூறவந்த கவிஞன், "புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்தவன்" (587) என்கிறான். தந்தை, முன்னர்ச் செய்த பிழையை மறுபடியும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கருதினான் இந்திரசித்தன். அதே நேரத்தில் புவனங்கள் அனைத்தையும் வென்ற ஒருவனிடம் வளவளவென்று பேசுதல் பொருத்தமுடைய தாகாது. எனவே, ஒரே வரியில் 'அரி உருவான ஆண்தகை, சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன் இவன் (587க என்று அறிமுகம் செய்துவைக்கின்றான்.