பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 233 நிலையைப் போக்கப் பாடலின் பின்னிரண்டடிகளில் அனுமன் விடை கூறுகிறான். இறப்ப உயர்ந்ததாகிய இப்பொருள் சாதாரண விலங்காகிய யானை ஒன்று தன் காலை முதலை கவ்விக்கொண்டபொழுது ஆதிமூலமே என்று அழைக்கவும் ஒடோடி வந்தது என்று கூறி முடிக்கிறான். 'காரணம் கேட்டி ஆயின், கடை இலா மறையின் கண்ணும் ஆரணம் காட்டமாட்டா, அறிவினுக்கு அறிவும், அன்னோன்; போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொது நின்று 'முதலே' . . . . . . . . - எனற வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான் " .. - (5883) என்ற இப்பாடலில் முன்னிரண்டிகள் கூறவந்த பொருளின் இறப்ப உயர்ந்த தன்மையையும், பின்னிரண்டடிகள் இறப்ப எளிவந்த தன்மையையும் ஒருசேரக் காட்டுகின்றன. திறனாய்வாளர் இதனை மிக உயர்ந்ததிலிருந்து மிக இறங்கிய fisosusoué & Diggo (From the sublime to the rediculous) grassroy கூறுவர். மேலே கூறியவற்றால் அடையமுடியாது என்றால் நான் என்பதன் துணை கொண்டு கற்கும் கல்வியும், கேள்வி. ஞானமும், செய்யும் வேள்வியும் அவனை அறிய உதவா. அதன் எதிராக நான், எனது - செயல் என்ற அகங்கார, மமகாரங்களை அறவே துறந்து நீயே சரணம் என்ற நிலையில் அவனை அழைத்தால் அந்த இறப்ப உயர்ந்த பொருள் எளிவந்த தன்மையுடன் நம் கைப்படும் என்ற கருத்தைத்தான் இப்பாடலில் அனுமன் அறிவிக்கின்றான். கேவலம் ஒரு யானைக்காக ஒடோடி வந்தவனாகிய அறத்தின் மூர்த்தி சரணம் என்று அழைப்போர்க்குத் தவறாது வந்து உதவுவான் என்ற கருத்தை வலியுறுத்துகிறான். - இத்துணை கூறிடக் கேட்டாலும் அறிவுவாதிகளுக்கு உள்ள ஒரு குறை என்னவென்றால், அந்த அறிவுவாதத்திலேயே மனம்சென்று கொண்டிருக்கும். எனவே அடுத்த பாடலிலும் அறிவின் துணை கொண்டு மூலப்பொருளின் இலக்கணத்தை வகுக்க முற்படுகிறான் அனுமன். ‘. .