பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கம்பன் எடுத்த முத்துக்கள் மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த காரணன் - கை வில் ஏந்தி, சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (5883) இப்பாடலின் முன்னிரண்டு அடிகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கன. ஒரு பொருள் என்று கூறியவுடன் தோற்றம், இருப்பு, முடிவு என்ற மூன்றும் அதற்கு உண்டு என்ற நினைவு தோன்றும். தோற்றம், முடிவு இல்லாத ஒன்று எங்குமே இல்லையென்பதும் அறிவால் கண்ட முடிவே இவ்வறிவால் காணப்படாத ஒன்று உண்டு; அதற்கு இந்த மூன்று நிலை இல்லை என்று எதிர்மறை முகத்தான் விளக்கம் கூறுகிறான். மேலும், மூன்று பரிமாணங்களை உடைய எந்தவொரு பொருளுக்கும் தோற்றம், இருப்பு, முடிவு என்பவை இருப்பதுபோல இப்பொருள்கள் எல்லாம் தோன்றி இருந்து மறைவதற்குரிய கால தத்துவமும் உண்டு. இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய காலத்தின் மூன்று நிலையையும் கடந்து நிற்கின்ற ஒரு பொருள் தோற்றம், ஈறு இல்லாததுபோல அப்பொருள்களுக்கு நிகழ்காலம், இறந்த கால்ம், எதிர்காலம் என்ற காலப் பரிமாணமும் இல்லை. இந்த இரண்டும் இன்மையின் அந்தப் பொருளை எந்தக் கணக்கிலும் கொண்டுவர முடியாது. இவ்வாறு பொருளை விளக்குவதால் பெளத்தருடையவாதம் போன்று எதிர்மறையாகவே அப்பொருளின் இலக்கணத்தைக் கூறுவதா என்றால், அதனை மறுத்து அனுமன் பேசுகிறான். மேலே கூறிய மூலம், நடுவு முதலியவை காலத்திற்குக் கட்டுப்பட்ட தன்மை, கணக்கில் அடங்குகின்ற தன்மை அனைத்தும் பொருள்களின் குணங்களைக் குறிப்பன. இந்தக் காலங்கள் இல்லாத பொருள் என்று கூறினால், இவை இல்லாமை என்ற குணம் பற்றிக் கொள்ளும். அதனை மறுத்துக் காரணம் என்று பேசுகிறான் அனுமன். மேலே கூறிய குணங்கள் இல்லை என்று கூறியதால் இன்மைப் பொருளே இலக்கணம் ஆகிவிடாதபடி, காரணம் என்று கூறுகிறான். மூலம், நடுவு, ஈறு என்ற மூன்று இயல்புகளையும் - தோற்றம், இருத்தல், மறைதல் என்ற காலப் பரிமாணத்தையும்