பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கம்பன் எடுத்த முத்துக்கள் செப்பற்பாலை (6014 என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு விடையாக, அனுமன் பேசியவற்றைக் கவிஞன் தன் சொற்களில் கூறுகிறான். அதற்கு ஒர் காரணம் உண்டு. சிலவற்றைச் சொல்லி, சிலவற்றைச் சொல்லாது விட்டான் அனுமன். ஏன் சிலவற்றைச் சொல்லவில்லை என்றால் அவற்றைச் சொல்லியிருப்பின் அனுமன் தன் பெருமையைத் தானே கூறியதாக முடியும். - ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் - சொல்லி, பூண்டபேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, - - போரில் நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும், விளம்பான் - தான் தன் வென்றியை உரைப்ப . . . வெள்.கி (6015) தன் பெருமையைச் சொல்ல நாணமடைந்தான் அனுமன். எனினும், அவன் கூறியவற்றைக் கேட்கின்றவர்கள் அங்கதன், சாம்பவன் முதலியோர் ஆதலின் அவன் கூறாதவற்றையும் தம் நுண்ணறிவால் அறிந்துகொண்டதாக அவர்களே பேசுகின்றனர். 'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த - தன்மை உரை செய, ஊர் தீ இட்டது ஒங்கு இரும் புகையே ஒத, கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட, தெரிதர உணர்ந்தேம், பின்னர், என் இனிச் செய்தும்? - என்றார் (6016) விரிவான பேச்சுகளில் ஒரு வரன்முறை இருப்பதைக் காணமுடியும். அங்கு நிகழ்ந்தவற்றை யெல்லாம் சொல்லி முடித்து உடனே போருக்குப் புறப்பட வேண்டும் என்று கூறி முடிக்க வேண்டியது அவனுடைய கடமையாகும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. சுக்கிரீவனுக்குத் தான், அடிைச்சனே தவிர இராமனுக்குத் தொண்டனே ஆவான். ஒரு தொண்டன் தலைவனைப் பார்த்து நீ உடனடியாகப் போருக்குப் புறப்பட வேண்டும் என்று கூறுவது அக்காலத்தில்